டாமன் டையூ யூனியன் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
பள்ளி மாணவி மும்பையில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்குச் சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. ஆரம்பத்தில், இந்த விஷயம் மும்பையில் உள்ள குழந்தைகளுக்கான உதவி மையமான சைல்டு லைனுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர், மும்பை காவல்துறையில் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பின்னர் டையு டாமன் போலீஸாருக்கு அது மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய டையு டாமன் காவல்துறையினர் , சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் கிளாடியோ நூனஸ் (57) மற்றும் ஆங்கில ஆசிரியர் லெஸ்டர் டி கோஸ்டா (23) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி முதன்முதலில் ஏப்ரல் 2022 இல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பாதிக்கப்பட்டவர் பலமுறை வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிள்ளையார் சிலைகளை கடலில் கரைத்தால் நீர் வாழ் உரினங்களுக்கு ஆபத்து – பூவுலகின் நண்பர்கள்
குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடய அறிவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை கொலை செய்யப் போவதாக மிரட்டியதாகவும், அதன் காரணமாக அவர் தனது பெற்றோரிடம் குற்றங்களை வெளிப்படுத்தவில்லை என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
Source: timesnownews
Madras HC Judgement on Kallakurichi Sakthi School Bail case – Pasumpon Pandian | Kallakurichi Case
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.