Aran Sei

தீப்பெட்டி தராததால் தலித் கொலை – வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

மத்தியப்பிரதேச மாநிலம், குணா மாவட்டதில், சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டியைத் தர மறுத்ததால் 50 வயது மதிக்கத்தக்க பட்டியல் சாதியைச் சேர்ந்தவரை, இருவர் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். தாக்கியவர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலர்கள் கைது செய்துள்ளனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தொழிலாளி லால்ஜி ராம் அஹிர்வார், கரோட் கிராமத்தில் ஒரு மேடையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட யஷ் மற்றும் அன்கேஷ் யாதவ் ஆகியோர் அவரிடமிருந்து சிகரெட்டுகளைப் பற்றவைக்க ஒரு தீப்பெட்டி கோரியதாகக், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு  டி.எஸ். பாகேல் தெரிவித்துள்ளார்.

`தலித்துகளும் ஆதிவாசிகளும் படிக்கக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்’ – ராகுல் காந்தி

தீப்பெட்டி  தன்னிடம் இல்லை என்று லால்ஜி  கூறியபோது ,அவர்களுக்குள் வாக்குவாதம் எற்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் லால்ஜி மீது தடிகொண்டு தாக்கியதால் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

`பழங்குடியின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தால் மாவோயிஸ்டா?’ – பள்ளி ஆசிரியைக் கைது

படுகாயம் அடைந்த அவரை அஹிர்வார் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல்  இறந்துள்ளார்.

ரூ.5000 கடனைத் திருப்பிச் செலுத்தாததால் பழங்குடியினர் ஒருவர் எரித்துக் கொலை

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம், 1989 இன் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர், அதே நேரத்தில் ,வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் குடும்பத்திற்கு 8.25 லட்சம் உதவி செய்ய மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

 

தீப்பெட்டி தராததால் தலித் கொலை – வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்