Aran Sei

தலித் இஸ்லாமியர்களை பட்டியல் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் ஜமியத் உலாமா மனு

லித் இஸ்லாமியர்களை பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜமியத் உலாமா-ஐ-ஹிந்த் என்ற அமைப்பு மனுத் தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், “இஸ்லாமியம் சமத்துவ கொள்கை அடிப்படையிலானது. இதில் ஜாதிகள் தடை செய்யப்பட்டிருந்தாலும், அதிலும் ஜாதி அமைப்புகள் இருக்கின்றன. இஸ்லாத்தில் ஜாதிகள் இல்லாதது என்ற அடிப்படையில், 1950-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவில், தலித் இஸ்லாமியர்கள் பட்டியல் பிரிவில் சேர்க்கப்படவில்லை. இஸ்லாத்தில் பின்தங்கிய வகுப்பினர் ஜாதி அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுகின்றனர்.

தலித் கிறிஸ்தவர்கள், தலித் இஸ்லாமியர்கள் பட்டியல் சாதியில் சேர்க்கப்படுவார்களா? – நீளும் உரையாடல்

இந்து, சீக்கியம், புத்த மதத்திலுள்ள தலித்கள் எல்லாம் பட்டியல் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சலுகைகளை அனுபவிக்கும் போது, அதே உரிமை தலித் இஸ்லாமியர்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்த பாகுபாடு, அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின் கீழ் விதிமுறை மீறல். தலித் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு உரிமை மறுக்கப்படுவதால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், அவர்களால் இதர மதங்களில் உள்ள பட்டியல் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சலுகைகளை பெறமுடியவில்லை. இது வரலாற்றுத் தவறு.

இஸ்லாமியர்கள் மற்றும் இதர மதத்தினரில் உள்ள பிரிவினருக்கு இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது. இஸ்லாமிய பட்டதாரிகள் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர்.

தலித் இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரப்படாதது ஏன்? – சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவோடு ஒரு நேர்காணல்

பல மதங்களைச் சேர்ந்த தலித்களில், நகர்ப்புறங்களில் உள்ள 47 சதவீத தலித் இஸ்லாமியர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களில் உள்ள தலித்களை விட இது அதிகம். கிராமங்களில், 40 சதவீத தலித் இஸ்லாமியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர்.

எனவே தலித் இஸ்லாமியர்களை பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Source : the hindu

ஏக்கர் கணக்கில் பொய் |அதிகாரத்திமிரில் பேசாதிங்க | கிளப்பா? கவர்னர் மாளிகையா? | Advocate Arulmozhi

தலித் இஸ்லாமியர்களை பட்டியல் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் ஜமியத் உலாமா மனு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்