Aran Sei

காவல் மரணங்கள்: தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்; இந்தியாவில் உத்தரபிரதேசம் முதலிடம்

ந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் நீதிமன்ற காவலில் இருந்து மரணமடைந்த விசாரணை கைதிகளின் எண்ணிக்கையில் 2528 மரணங்களுடன் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 432 காவல் மரணங்களுடன் தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் போலீஸ் காவலில் மரணமடைந்த விசாரணை கைதிகளின் எண்ணிக்கையில் 100 மரணங்களுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 46 மரணங்களுடன் தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

‘அப்பா கொலை செய்யப்பட்டத மறைக்க போலீஸ்காரங்க பேரம் பேசுனாங்க’ – தமிழகத்தில் தொடரும் ஜெய் பீம் கதைகள்

ஏப்ரல் 19 அன்று சென்னையில் விக்னேஷ் என்பவர் போலீஸ் காவலில் உயிரிழந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் தொடர்பான பிரச்சினை பேசுபொருளானது.

ஏனெனில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த அப்பா, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் தமிழ்நாட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தென்னிந்தியாவில் அதிகளவிலான (468) காவல் மரணங்களுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

சாத்தான்குளம் கொலை வழக்கு: ‘என்னை தவிர மற்ற 8 பேருமே கொலை செய்தனர்’ – நீதிபதிக்கு முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கடிதம்

இத்தகைய காவல் மரணங்கள் நடந்த போதிலும் இது தொடர்பாக எந்தவொரு வழக்கிலும் விசாரணையும் நடத்த தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டிலிருந்து 2022 வரை இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 11,419 காவல் மரணங்களில் 1184 மரணங்களுக்கு அதாவது கிட்டத்தட்ட 10% மரணங்களுக்கு நிதி இழப்பீட்டு வழங்க வேண்டுமென தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதில் வியப்பளிக்கக்கூடிய விதத்தில் 11,419 காவல் மரணங்களில் ஒன்றில் கூட அதனை எதிர்த்து வழக்கு தொடர தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைக்க வில்லை.

விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கு: காவல்துறையினரை கைது செய்ய இருப்பதாக சிபிசிஐடி தகவல்

11,419 காவல் மரணங்களில் வெறும் வெறும் 21 மரணங்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் 0.2% மட்டுமே

போலீஸ் காவலில் குற்றம் தொடர்பான புகாரின் பெயரில் சந்தேகத்திற்குரிய நபரை காவல்துறையினர் கைது செய்து அவரை விசாரிப்பது போலீஸ் காவல் எனப்படும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணிநேரத்திற்குள் நீதிபதியின் முன் ஆஜர்ப்படுத்த வேண்டும். போலீஸ் காவல் அதிகபட்சம் 15 நாள்கள் வரை நீடிக்கலாம்.

நீதிமன்ற காவலில் குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்படுவார். அதிகபட்சமாக 90 நாட்கள் வரை ஒருவரை நீதிமன்ற காவலில் வைக்க முடியும்.

Source : the hindu

One Year Of DMK சாதனையா? சறுக்கலா? Ve Mathimaran Interview

காவல் மரணங்கள்: தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்; இந்தியாவில் உத்தரபிரதேசம் முதலிடம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்