கார்பரேட்களுக்கான சமூக பொறுப்பைக் கட்டாயப்படுத்த கூடாது. அது உள்ளிருந்து வர வேண்டும் என விப்ரோ நிறுவனரும் தொழிலதிபருமான் அசிம் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
அசிம் பிரேம்ஜிக்கு அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது சனிக்கிழமையன்று (பிப்ரவரி 21) வழங்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட அசிம் பிரேம்ஜி, “கார்பரேட் நிறுவனங்கள் சமூக பொறுப்புடன் செயல்படுவதற்கு சட்ட ஆணை தேவை என்று நான் நினைக்கவில்லை. அது உள்ளிருந்த வர வேண்டும். ஆனால் இது என் தனிப்பட்ட கருத்து” எனத் கூறியுள்ளார்.
’எல்லோருடைய வீட்டிலும் அம்பேத்கர் புகைப்படம்’ : விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
கடந்த ஆண்டு ரூ .7,904 கோடியை கொரோனா நிதியாக வழங்கிய பிரேம்ஜி, (ஒரு நாளைக்கு ரூ .22 கோடி), ”கோவிட் -19 பெருந்தொற்று என்பது சுகாதாரம் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், சமுதாயத்தின் கட்டமைப்பைச் சமமாகவும், நியாயமானதாகவும் மாற்ற வலியுறுத்தும் எச்சரிக்கை மணி” எனக் கூறியுள்ளார்.
ஒரு தனிநபரின் சமூக பொறுப்பையும் அவரது நிறுவனத்தின் பொறுப்பையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என அசிம் பிரேம்ஜி தெரிவித்தார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.