Aran Sei

T20 தோல்வியால் முகமது ஷமிக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் – முகமது ஷமிக்கு இந்திய அணியின் முன்னாள் விரர்கள் ஆதரவு

ந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு எதிரான மோசமான விமர்சனங்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை T20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தித்தது.

இந்தத் தோல்வியைத் தாங்க முடியாத ரசிகர்கள், நேற்றைய ஆட்டத்தில் மோசமாகப் பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை அவதூறாக சமூக ஊடங்களில் விமர்சித்தனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக், “முகமது ஷமி மீதான இணைய தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. நாம் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும். அவர் ஒரு சாம்பியன். இந்திய அணியின் தொப்பியை அணிபவர்கள், இந்த ஆன்லைன் கும்பலைவிட அதிகமாக தங்கள் இதயத்தில் இந்தியாவை சுமக்கிறார்கள். உங்களுடன் இருக்கிறோம் ஷமி” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனது டிவிட்டர் பக்கத்தில், “நானும் கூட இதற்கு முன்னர் பாகிஸ்தானுடன் தோல்வியுற்ற இந்திய அணியில் விளையாடி இருக்கிறேன். ஆனால், ஒருபோதும் பாகிஸ்தானுக்கு போ என்று கூறவில்லை. நான் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்தியாவை குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த முட்டாள்தனம் நிறுத்தப்பட வேண்டும்” என்று வலியுத்தியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், “இந்திய அணியை ஆதரிப்பதென்பது, இந்திய அணி சார்பாக களமிறங்கு ஒவ்வொருவரையும் ஆதரபிப்பதாகும். முகமது ஷமி உலக தரமான பந்து வீச்சாளர். எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் அமைவதுபோல, ஒரு மோசமான நாள் அவருக்கு அமைந்தது. நான் முகமது ஷமியுடனும் இந்திய அணியுடனும் நிற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

T20 தோல்வியால் முகமது ஷமிக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் – முகமது ஷமிக்கு இந்திய அணியின் முன்னாள் விரர்கள் ஆதரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்