ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) பங்கு விற்பனையை தொடங்குவதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ள விதத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
இந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அக்கட்சி, “பங்கு விற்பனையை தொடங்குவது என்பது, எல்ஐசியின் பொதுத் தன்மையை அழித்து, கிட்டத்தட்ட 29 கோடி பாலிசிதாரர்களுக்குச் சொந்தமான விலைமதிப்பற்ற நிதிச் சொத்துக்களை ஒப்படைப்பதற்கான முதல் படியாகும்” என்று கூறியுள்ளது.
விற்பனைக்கு வரும் எல்ஐசி பங்குகள்: ஒரு பங்கின் விலை எவ்வளவு தெரியுமா?
“எல்ஐசி நிறுவனத்தின் தன்மையே பாலிசிதாரர்களின் நம்பிக்கைதான். ஆனால், அதை பங்குதாரர்களுக்கு லாபத்தை அதிகரிக்கும் நிறுவனமாக மாற்ற ஒன்றிய அரசு விரும்புகிறது. எல்ஐசியின் பங்குகளை விற்பதன் வழியாக, பாலிசிதாரர்களின் எதிர்கால வருமானம் பாதிப்புக்குள்ளாகிறது. இது குறித்து அவர்களிடம் ஆலோசிக்கப்படவோ அல்லது தெரிவிக்கப்படவோ இல்லை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: New Indian Express
குறுக்கு வழியில் LIC யை விற்கும் Nirmala Sitharaman
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.