Aran Sei

‘விவசாய கடன் தள்ளுபடி பெரும்பகுதி விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும்’ – முத்தரசன்

ரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பு வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளிலும், கிராமிய வங்கிகளிலும் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காது என்பது பெரும்பகுதி விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்பதை அரசு உணர வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “நடப்பாண்டு 2021 ஜனவரி 31ஆம் தேதி வரையிலும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ள விவசாயிகளின் பயிர்க்கடன நிலுவைத்தொகை, 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் எனச் சட்டப்பேரவையில் விதி 110-ன்கீழ் முதல்வர் அறிவித்துள்ளார். கடன் தள்ளுபடி கோரி நீண்ட காலமாகப் போராடி வரும் விவசாயிகளுக்கு இது ஓரளவு ஆறுதல் அளிக்கும். ஆனால், இந்தக் கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் சுயசார்புக்கு உதவாது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயத்தில் சுதந்திர சந்தை – அமெரிக்க அனுபவம் சொல்வது என்ன?

உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை ஏற்று குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து, அரசு கொள்முதல் செய்யவும் சட்டபூர்வ ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

“இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டங்களும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை தாங்கிச் செயல்படும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உழவர் தின விழாக் கூட்டத்தில், ‘திமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகள் கடன்கள் ரத்து செய்யப்படும்’ என அறிவித்ததும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டிய அழுத்தம் கொடுத்துள்ளது.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாய மசோதாக்கள் : உள்ளூர் வணிகர்களுக்கு பதில் கார்ப்பரேட்டுகள்

அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எனினும், தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளிலும், கிராமிய வங்கிகளிலும் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காது என்பது பெரும்பகுதி விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்பதை அரசு உணர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வங்கிகளிலும், கிராமிய வங்கிகளிலும் நிலுவையில் உள்ள விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு, மாநில அரசு அழுத்தம் கொடுத்து நிறைவேற்ற வேண்டும் என  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறது என்று மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

‘விவசாய கடன் தள்ளுபடி பெரும்பகுதி விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும்’ – முத்தரசன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்