Aran Sei

உ.பி.,யில் மாடு திருடிய வழக்கு: எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து காவல்துறை விசாரணை – 5 காவலர்கள் பணியிடை நீக்கம்

த்தரபிரதேசத்தில் மாடு திருடிய வழக்கில் கைதான இளைஞருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்துக் கடுமையாக விசாரணை நடத்திய காவலர்கள் 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் தினக்கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் ரெஹான். மே 2ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது ரெஹான் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார். அவரை மாடு கடத்தல் கும்பலுக்கு உதவிய புகாரில் காவல்துறையினர் கைது செய்தனர். ரெஹானிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக ரெஹானின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

முஹம்மது நபி குறித்த அவதூறு கருத்து –  இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் அரசு வலியுறுத்தல்

காவல்துறையினரின் விசாரணைக்குபின் பலத்த காயம் அடைந்த ரெஹானால் நடக்கவோ, பேசவோ முடியவில்லை. காவல்துரையினர் அவருக்கு மின்சாரம் பாய்ச்சியுள்ளனர். அவரை அடிப்பதற்கு ஒரு குச்சியைப் பயன்படுத்தியதால் அவரது அந்தரங்க பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்” என்று அவரது உறவினர்  செய்தியாளர்களிடம் கூறினார்.

5,000 ரூபாய் லஞ்சம் கொடுத்த பிறகே அவரை காவல்துறையினர் விடுவித்ததாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவரது சிகிச்சைக்காக 100 ரூபாய் நோட்டை காவலர்கள் கொடுத்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை: கலவரத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் – வழக்கு பதியாமல் காவல்துறை மெத்தனமாக இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

“இந்த வழக்கில் தொடர்புடைய காவலர்கள் 7 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதில் குறிப்பிடப்பட்டுள்ள 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். “விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை இன்னும் நடந்து வருகிறது” என்று நகர காவல்துறையின் மூத்த அதிகாரி பிரவீன் சிங் சவுகான் கூறினார்.

Source: NDTV

Santhanக்கு அடுத்து Lie Detector எனக்கு தான் வெச்சாங்க | Tada Rahim Interview

உ.பி.,யில் மாடு திருடிய வழக்கு: எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து காவல்துறை விசாரணை – 5 காவலர்கள் பணியிடை நீக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்