Aran Sei

தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு விலை குறைப்பு – அதார் பூனாவாலா அறிவிப்பு

கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை செலுத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கான விலை ரூ.225 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு நேற்று அறிவித்தது. இதன்படி 2-வது டோஸ் செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம். இந்தப் பணியானது நாளை முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க சிறைகளில் காயத்ரி மந்திரம் ஒலிக்கப்படும் – உத்தரப் பிரதேச சிறைத்துறை அமைச்சர் அறிவிப்பு

இந்நிலையில், தனியார் மருத்துமனைகளுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலையை ரூ.225 ஆக குறைத்து சீரம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஒன்றிய அரசுடன் நடத்திய ஆலோசனையின்படி தனியார் மருத்துமனைகளுக்கான தடுப்பூசியின் விலை ரூ.600-ல் இருந்து ரூ.225 ஆக குறைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்

இதைபோன்று பாரத் பயோ டெக் நிறுவனமும் கோவாக்சின் தடுப்பூசியின் விலையை ரூ.225 ஆக குறைந்துள்ளது.

Source: NDTV

இந்தி எதிர்ப்பு போர்: தமிழ்நாட்டின் பெருமை

தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு விலை குறைப்பு – அதார் பூனாவாலா அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்