வேலூர் அரசு மருத்துவமனையில் மூன்று நோயாளிகள் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் பற்றாக்குறைதான் காரணம் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேற்று (ஏப்ரல் 20), வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி, செல்வராஜ், சிராஜ் என்ற மூன்று நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இம்மூவரின் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து, அவர்களின் மரணத்திற்கு ஆக்சிஜன் பற்றக்குறை காரணம் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகமும் மாவட்ட ஆட்சியரும் விளக்கமளித்துள்ளனர். மேலும், வேலூர் அரசு மருத்துவமனையில் போதிய அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மூவரில் இருவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டதாகவும், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைக்கு அருகே, இன்னும் ஒரு ஆக்சிஜன் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயிரிழந்தவர்களின் உறவினர்கள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் தான் உயிரிழப்பு நிகழ்ந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
Source : News18 Tamilnadu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.