டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் என்ற அமைப்பு, 2020 ஆம் ஆண்டிற்காகன் ஊழல் தரவரிசை பட்டியலை ஜனவரி 28 ஆம் தேதி வெளியிட்டது. அதில் இந்தியா 6 இடங்கள் சரிந்து 86வது இடத்தைப் பிடித்துள்ளது.
வல்லுனர்கள் மற்றும் தொழிற்துறையினரின் கூற்றின் படி 180 நாடுகளின் பொது துறையில் இருக்கும் ஊழல் அளவுகளைக் கொண்டு 0 முதல் 100 வரை மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 0 என்றால் ஊழல் நிறைந்தது, 100 என்றால் முற்றிலும் ஊழல் அற்றது.
2019 ஆம் ஆண்டு 40 புள்ளிகளுடன், 180 நாடுகளின் பட்டியளில் 80 வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டும் அதே புள்ளிகள்பெற்றும், 180 நாடுகளில் 86 வது நாடாக இடம்பிடித்திருக்கிறது என டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் கூறியுள்ளது.
ஊழல் தரவரிசையில் இந்தியா இன்னும் மிகக்குறைவாக இருப்பதாகத் தரவரிசை தெரிவித்து வந்தாலும், குறியீடு எந்த ஒரு நாட்டின் உண்மையான ஊழல் அளவை பிரதிபலிக்கவில்லை என்றும் ஒரு நாட்டின் ஊழல் நிலைமையை மட்டுமே ஒருங்கிணைத்துத் தீர்மானிக்கிறது என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இந்தியக் குடியரசை இனி என்னவென்று அழைப்பது – மருத்துவர் சையத் ஹஃபீசுல்லா
இந்த ஆண்டு 88 மதிப்பெண்களுடன் நியூசிலாந்தும், டென்மார்க்கும் முதல் இடத்திலும், 12 மதிப்பெண்களுடன் சோமாலியாவும், தெற்கு சூடானும் 179வது இடத்தில் உள்ளதாக டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் வெளியிட்ட ஊழல் தரவரிசை பட்டியல் தெரிவித்துள்ளது.
Sources : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.