கர்நாடகா மாநிலத்தில் 13,000 பள்ளிகளை பிரதிநிதித்துவம் செய்யும் இரண்டு கல்வி கூட்டமைப்புகள், மாநில பாஜக அரசுக்கு எதிராக புகார் கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளன.
கர்நாடகா மாநிலத்தின் தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி அமைப்புகளின் கூட்டமைப்பு மாநில கல்வித்துறையில் ஊழல் பெருமளவில் உள்ளதாக தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில், ” அறிவுப்பூர்வமற்ற, அர்த்தமற்ற, பாரபட்சமான முறையில் தனியார் பள்ளிகளுக்கு அரசுகள் விதிமுறைகளை வகுக்கின்றன. இது தொடர்பாக மாநில கல்வி அமைச்சர் பிசி நாகேஷிடம் புகார்கள் தொடர்ந்து அளிக்கப்பட்ட போதிலும் எந்த பதிலும், நடவடிக்கையும் இல்லை.
மாநிலத்தில் உள்ள கல்வி அமைப்புகளின் உள்ள மோசமான நிலை, அதன் பிரச்னைகள் ஆகியவற்றை கேட்கும் மனப்பாங்கு கல்வித்துறையிடம் இல்லை. பாஜகவின் இரு அமைச்சர்கள் பள்ளிக் கல்விக்கான பட்ஜெட்டை மோசமாக்கி பெற்றோர்கள் பிள்ளைகளை படிக்க வைக்க அதிக செலவு செய்யும் சூழலுக்கு தள்ளியுள்ளனர்.
இந்தாண்டு அரசு பாடத்திட்டத்தின் புத்தகங்கள் பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்னும் சென்று சேர்வதில்லை.கல்வி அமைச்சருக்கு மாநிலத்தின் தனியார் மற்றும் அரசு பள்ளிகளை கடுமையான விதிமுறைகளில் இருந்து விடுவிக்கும் எண்ணம் இல்லை. இதன் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான சுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, மாநில கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதேபோல், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்” என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ranjith Film on KGF exclusive Update I Natchathiram Nagargiradhu I DOP Kishor Kumar Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.