Aran Sei

இந்தியாவில் 11 கோடி பேருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி: இந்த அளவு கொரோனாவைத் தடுக்க உதவாதென ஆய்வில் தகவல்

கொரோனாஇரண்டாம் அலை வேகம் எடுத்து வரும் சூழலில் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் அளவானது, கொரோனாவை தடுக்க எந்த விதத்திலும் உதவாது என மாநிலங்களிலிருந்து வரும் செய்திகள் தெரிவிப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று வரை இந்தியாவில் 111 மில்லியன் கொரோனா  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அது ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுவதாகக் கொண்டால், இந்திய மக்கள் தொகையில் 7 விழுக்காடு மட்டுமே ஆகும் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனோ இரண்டாம் அலைப்பரவலிலும் மதுக்கடைகள் மூடப்படாதது ஏன்? -மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று உயர்ந்து வருவதாகவும், சில மாநிலங்களில் உயரும் வேகம் மட்டுமே குறைவாகவுள்ளதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.

கடந்த ஏப்ரல் 12 வரை இந்தியாவில் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 10 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக லடாக்கில் சுமார் 22.48% மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

இந்தியாவில் கொரோனா அவசர பயன்பாட்டுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி – நிபுணர் குழு பரிந்துரை

சத்தீஸ்கரில் 14 விழுக்காடு  மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் ஏப்ரல் 1 அன்றிலிருந்து இண்றுவரை 12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, கேரளாவின் மக்கள் தொகை 3.5 கோடி அதில் 13விழுக்காடு மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் ஒரு நாளைக்கு பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 2,100 முதல் 5,600 வரை அதிகரித்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

ரெம்டிசிவிர் தடுப்பு மருந்தை சட்டப்படி முறைப்படுத்த வேண்டும் – இந்திய மருத்துவக் கழகம் வேண்டுகோள்

இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் அதன் மக்கள் தொகையில் 3.6% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு ஏப்ரல் 1 அன்று 1000 மாக இருந்த பாதிப்புகள் தற்போது 18,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

இந்தியாவில் 11 கோடி பேருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி: இந்த அளவு கொரோனாவைத் தடுக்க உதவாதென ஆய்வில் தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்