கடத்தல் மற்றும் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்தல் தொடர்பாக 2017 ஆம் ஆண்டு விசாரணை நடத்திய அதிகாரிகளைக் கொல்ல திட்டமிட்டதாக மலையாள நடிகர் திலீப் மீது கேரள காவல்துறையின் குற்றப்பிரிவு புதிய வழக்கு ஒன்றை நேற்று பதிவு செய்துள்ளது.
திரைப்பட இயக்குநர் பாலச்சந்திரகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. இந்தப் புதிய வழக்கில் திலீப்பின் சகோதரர் அனூப் மற்றும் அவரது மைத்துனர் சூரஜ் உட்பட மேலும் 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அண்மையில், நடிகர் திலீப்பின் நண்பரும், மலையாள இயக்குநருமான பாலச்சந்திரன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காட்சிகளை திலீப் மற்றும் அவருக்கு நெருக்கமான சிலர் பார்த்தது தனக்குத் தெரியும் என்று கூறியிருந்தார்.
“2017 ஆம் ஆண்டின் கொச்சி காவல் ஆணையரான ஜார்ஜை நோக்கி திலீப் விரலை நீட்டிப் பேசினார். அதில் சோஜன், சுதர்சன், சந்தியா, பைஜு பவுலோஸ் மற்றும் உங்களுடன் சேர்த்து 5 அதிகாரிகளும் பாதிக்கப்படப் போகிறீர்கள். அதிலும் என்னைக் காயப்படுத்திய சுதர்சன் கையை நான் வெட்டாமல் விட மாட்டேன் என்று அவர் பேசியுள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ஒரு மாதத்திற்குப் பிறகு எர்ணாகுளம், ஆலுவாவில் உள்ள திலீப் வீட்டில் காவல்துறை அதிகாரிகளைக் கொல்லச் சதி நடந்ததாகவும், பாலச்சந்திரகுமார் இந்த சதியை நேரடியாகப் பார்த்தவர்” என்றும் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி 116, 118, 120 (பி), 506 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இவ்வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 16ஆம் தேதிக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது.
பக்தாஷ் அப்டின்: அதிகாரத்தை எதிர்த்த மக்கள் கவிஞன் மறைந்தார்
மிக அண்மையில் இவ்வழக்கில் புதிய விசாரணை கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்குப் பாதிக்கப்பட்ட நடிகை கடிதம் எழுதியிருந்தார்.
அதைத்தொடர்ந்து இந்த விசாரணையை நடத்தும் எர்ணாகுளம் கூடுதல் சிறப்பு அமர்வு நீதிமன்றம், ஜனவரி 20ஆம் தேதி இப்புதிய விசாரணையின் அறிக்கையைத் தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
Source : Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.