Aran Sei

இணையத்தில் இஸ்லாமியப் பெண்கள் மீது அவதூறு: ஆர்எஸ்எஸ்தான் காரணம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு

புல்லி பாய்’ என்ற செயலியில் இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்யும் வகையில் புகைப்படங்களை பதிவேற்றியதாக தொடரப்பட்ட வழக்கில், மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இணைந்து, நாட்டில் வெறுப்பு சூழலை வளர்த்து வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக சித்தாந்தத்தின் தீவிரவாதத்தனத்தால் தூண்டிவிடப்பட்ட 18 தொடங்கி 21 வயது இளைஞர்கள் குற்றங்களில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. கல்வியிலும் பணியிலும் சிறந்து விளங்குவதற்குப் பதிலாக, பாஜக-ஆர்எஸ்எஸ்களின் கைகளில் அடியாட்களாக மாறிவிட்டனர். ஒரு தலைமுறை இந்தியர்களே வெறுப்புக்கு ஆளாகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

புல்லி பாய் செயலியில் போலி பெயர்கள்: ‘இஸ்லாமியர், சீக்கியர்களிடையே வகுப்புவாத பிரச்சினை உருவாக்க சதி’ – காவல்துறை

ஆர்எஸ்எஸ்ஸை குற்றம்சாட்டியுள்ள கர்நாடக சட்டமேலவை உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத், “இந்தியாவில் அனைத்து மத வெறுப்புக்கும் தாய் அமைப்பு எது? புல்லி பாய் மற்றும் சுல்லி டீல்களுக்குப் பின்னால் இருப்பது யார்? இது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இளைஞர்கள் வெறுப்புப் பரப்புரைகளுக்கு இரையாகிவிடக் கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசியுள்ள ஒன்றிய முன்னாள் அமைச்சர் கே.எச்.முனியப்பா, “சமூகத்தை பிலவுப்படுத்தவும், நிரந்தரமாக தங்களை அதிகாரத்தில் வைத்துக்கொள்ளவும் இளைஞர்களுக்கு வெறுப்பை கற்பிக்கிறீர்கள் எனில், உங்கள் திட்டம் பலிக்காது. பாஜக-ஆர்எஸ்எஸ் இந்த வெறுப்பு பரப்புரையை நிறுத்த வேண்டும்” என்று குற்றச்சாட்டியுள்ளார்.

Source: New Indian Express

இணையத்தில் இஸ்லாமியப் பெண்கள் மீது அவதூறு: ஆர்எஸ்எஸ்தான் காரணம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்