Aran Sei

விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளத்தின் செயல்பாடுகளை மக்கள் முன் அம்பலப்படுத்துவோம் – காங்கிரஸ் உறுதி

விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளத்தை மக்கள் முன் அம்பலப்படுத்துவோம் என்று காங்கிரஸ் கட்சியின் பட்டியல் சமூக பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, நேற்று(ஜனவரி 14), காங்கிரஸ் கட்சியின் பட்டியல் சமூக பிரிவு தலைவர் ராஜேஷ் லிலோதியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவர்களின் உண்மையான நோக்கங்களையும் செயல்பாடுகளையும் மறைக்க காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது. நாங்கள் அவற்றை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.

“இரண்டு அமைப்புகளும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கிளைகள். அவற்றின் ஏஜென்சிகளாக செயல்படுகின்றன. இந்தியா முழுவதும் பட்டியல் சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் எதிரான சாதி அடிப்படையிலான வன்முறை தொடர்வதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளமும் வேலை செய்கின்றன” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளத்தின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்த, நாம் கடந்த காலத்தில் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. இரு அமைப்பின் தலைவர்களும் ஒடுக்கப்பட்டவர்கள்மீது தாக்குதல்களில் ஈடுபட்டதற்கான பல உதாரணங்கள் உள்ளன” என்று தனது ராஜேஷ் லிலோதியா குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளத்தின் செயல்பாடுகளை மக்கள் முன் அம்பலப்படுத்துவோம் – காங்கிரஸ் உறுதி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்