நேற்று(பிப்பிரவரி 9) காலை, மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது எந்த கேபினட் அமைச்சரும் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் இணை அமைச்சர்கள் ‘மோடி சாலிசா’ என முழக்கமிட்டதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை கொறடாவுமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநிலங்களவையில் எழுபது ஆண்டுகளில் முதல் முறையாக இன்று எந்த கேபினட் அமைச்சரும் கேள்வி நேரத்தின் போது பதிலளிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
For the first time in 70 years of the Rajya Sabha, today no Cabinet Minister answered questions during Question Hour. The Ministers of State were pathetic—reading out replies already circulated and chanting Modi Chalisa!
— Jairam Ramesh (@Jairam_Ramesh) February 9, 2022
மேலும், “இணை அமைச்சர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட பதில்களை வாசித்துவிட்டு, மோடி சாலிசா என முழக்கமிட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி நேரத்தின்போது, கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார், சமூக நீதித் துறை இணை அமைச்சர் நாராயணசாமி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் உள்துறை இணை அமைச்சர் நித்யநாத் ராய் மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.
கேள்வி நேரத்தின் போது பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால், “சார், கேபினட் அமைச்சர்கள் யாரும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
நேற்று(பிப்பிரவரி 9), மாநிலங்களவையில் பேசியுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்து வருவதாகவும் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வேலை உருவாக்கம் மற்றும் அதிகரித்து வரும் உள்நாட்டு தேவை குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை எனவும் கூறி, ஒன்றிய அரசை விமர்சித்துள்ளனர்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.