Aran Sei

டெல்லி: வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் கருப்பு உடையுடன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி, சசிதரூர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

விசாரணை அமைப்புகளை ஒன்றிய  அரசு தவறாக பயன்படுத்துகிறது, பணவீக்கம், விலைவாசி உயர்வு என பல காரணங்களை கூறி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கருப்பு உடையில் நேற்று பேரணி சென்றனர்.

ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து ஆகஸ்ட் 10 போராட்டம் – தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணி செல்ல முயன்ற சசிதரூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை, விஜய் சவுக் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு அருகே பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். தடுப்புகளை தாண்டி குதித்து பேரணி செல்ல முயன்ற பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

தெற்காசிய கடலை ராணுவமயமாகும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது – மே 17 இயக்கம் அறிக்கை

இதேபோல், பிஹார் தலைநகர் பாட்னா, தெலங்கானா தலைநகர் ஹைதராபாத், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  கூறும்போது, நாட்டில் சர்வாதிகாரம் தொடங்கிவிட்டது. பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் தேசிய ஆளவிலான போராட்டத்தை தொடங்கி உள்ளது. ஹிட்லர் கூடத்தான் தேர்தல்களில் வெற்றி பெற்றார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்தியப் பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது எனப் புரியல்லை. சுமார் நூறு ஆண்டுகளாக இந்தியா படிப்படியாக உருவாக்கியது எல்லாம், உங்கள் கண்முன் அழிந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Kallakurichi Sakthi School New CCTV Video is a Pre Planned Setup – Dr Pugazhendhi Interview | Haseef

டெல்லி: வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்