பாதுகாப்பு படைக்கு ஆள்சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் சத்தியாகிரகப் போராட்டத்தை காங்கிர்ஸ் கட்சி நடத்தி வருகிறது.
“நாங்கள் இன்று ஜந்தர் மந்தரில் சத்தியாகிரகத்தில் அமர்ந்துள்ளோம், மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவரைச் சந்தித்து அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறக் கோருவோம்” என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் மாக்கன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”அக்னிபத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் இளைஞர்களிடம் முதலில் கருத்து கேட்டிருக்க வேண்டும். இந்த திட்டம் முதலில் இளைஞர்களுடனும் பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட வேண்டும், ஆனால் அதற்கு முன், அது திரும்பப் பெறப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் விசாரிக்கப்பட்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை குறிவைத்தற்கு எதிராகவும், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகவும் ஒன்றிய அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராகவும் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
“ராகுல்காந்தி எப்படி துன்புறுத்தப்பட்டார், அமலாக்கத்துறை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாங்கள் குடியரசுத் தலைவரிடம் தெரிவிப்போம்” என்று அஜய் மாக்கன் குறிப்பிட்டுள்ளார்.
“காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர்களுக்கு எதிரான அக்னிபத் திட்டத்துக்கு எதிராகவும், ராகுல் காந்தியை குறிவைத்து மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராகவும் நாடு முழுவதும் லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் 20-06-22 அன்று அமைதி வழியில் போராட்டம் நடத்துவார்கள். காங்கிரஸ் பிரதிநிதிகள் ராஷ்டிரபதி பவனின் குடியரசுத் தலைவரை மாலையில் சந்திக்க உள்ளனர்” என்று பதிவிட்டிருந்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, காங்கிரஸ் கட்சித் தலைமையகத்திற்குள் டெல்லி காவல்துறை நுழைந்தது, ராகுல் காந்தியை குறிவைத்து அமலாக்கத்துறை செய்த விசாரணை, போராட்டத்தின் போது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் காவல்துறையினர் மோசமாக நடந்து கொண்டது குறித்து குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்க உள்ளனர்.
Source: ndtv
Agnipath க்கு எதிரா போராடுவரங்க மேல Bulldozer பாயுமா? Congress Peter Alphonse
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.