மதச்சார்பின்மையின் மதிப்புகளை காங்கிரஸ் என்றும் கடைப்பிடித்து வந்துள்ளது. ஆனால் அதே சமயம் சமூகத்தில் பிளவை உருவாக்குவதையே பாஜக செய்து வருகிறது என்று மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அசோக் சவான், “மகாத்மா காந்தியின் மதிப்புகள் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேருவின் நாட்டைக் கட்டியெழுப்புவது குறித்த கருத்தாக்கத்தின்படி காங்கிரஸ் செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் சித்தாந்தத்தை ஓரங்கட்டுவதன் மூலம் தற்போது நாட்டில் எதேச்சாதிகாரம் ஊக்குவிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். இதை எதிர்கொள்ள காங்கிரஸ் தனது பிரச்சாரத்தைத் தொடங்கும் என்று அசோக் சவான் கூறியுள்ளார்.
காங்கிரஸ் அனைத்து மதங்களையும் சாதிகளையும் சேர்ந்த மக்களை சமமாக நடத்துகிறது. மதச்சார்பின்மையை எப்போதும் வளர்த்து வருகிறது என்று மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
Source : newindianexpress
இந்த சவுண்ட்லாம் இங்க வேணாம் Annamalai | Surya Xavier Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.