விவசாயிகளை கடனற்றவர்களாக மாற்ற குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை இயற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
உதய்பூரில் நடைபெற்று வரும் ’சிந்தன் ஷிவிரின் இரண்டாம் நாள் நிகழ்விற்கு பிறகு நேற்று (மே 14) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஹரியானா முன்னாள் முதலமைச்சர் பூபேந்தர் சிங் ஹூடா, “ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையும் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும்” என்று தெரிவித்துள்ளார்.
விவசாயம் மற்றும் விவசாயிகள் பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஹூடா, ”விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதத்திற்கான சட்டம், விவசாயத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், பயிர் காப்பீட்டுத் திட்டம், நிறுவன கடன் முதலீடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் மோசமான நடவடிக்கைகள் ஆகியவை குழுவின் முன் இருக்கும் முக்கியமான பிரச்னைகளில் அடங்கும் என்று கூறியுள்ளார்.
தொழில் கடன்களைப் பொறுத்தவரை, சமரசம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படுகிறது. அதேபோல விவசாயிகளின் கடன் தொடர்பான குறைகளைத் தீர்ப்பதற்கும் தீர்வு காண்பதற்கும் ஒரு தேசிய விவசாய கடன் நிவாரண ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வங்கியைப் பொறுத்தவரை விவசாயத்தை தொழில்துறைக்கு இணையாகக் கருத வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
”கடன் தள்ளுபடிக்கு பதிலாக விவசாயிகளை கடன் அற்றவர்களாக ஆக்குவதே எங்கள் நோக்கம். அதை நாங்கள் எப்படிச் செய்வோம்?. எம்.எஸ்.பி.யில் சட்ட உத்தரவாதம் இருக்க வேன்டுமா என்று கேட்டால் எங்களின் ஒருமித்த கருத்து என்னவென்றால், அதற்கு சட்டரீதியான உத்தரவாதம் இருக்க வேண்டும் என்பக்தே. இது அனைத்து விவசாயிகள் தொழிற்சங்களின் கோரிக்கையாகும், மேலும் ஒரு விவசாயி என்ற முறையில் குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.”என்று ஹூடா கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக உறுதியளித்தது, ஆனால் அதற்கு பதிலாக அவர்களின் கடனை இரட்டிப்பாக்கியது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 31, 2014 தேதி ரூ. 9.64 லட்சம் கோடியாக இருந்த விவசாயிகளின் கடன், தற்போது ரூ. 16.8 லட்சம் கோடியாக உள்ளது. விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசுகள் அவ்வப்போது விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து, அவர்களின் பிரச்னைகளை குறைத்து வருகிறது என்று பூபேந்திர சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.
Source: The Hindu
BJP Agenda-ஐ பரப்பும் தமிழக ஊடகங்கள் I VCK Vikraman Interview l Gurumurthy | Ponmudi I Annamalai
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.