டெல்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை என்பது மக்களிடையே விஷத்தைப் பரப்புவதற்கான ஒரு சாக்குப்போக்கு என்று டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அனில் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அனில் சௌத்ரி, “ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை என்பது மக்களிடையே விஷத்தைப் பரப்புவதற்கான ஒரு சாக்குப்போக்கு. வகுப்புவாத பதற்றம் நிறைந்த பகுதிக்கு புல்டோசர்களை அனுப்பியதன் வழியாக பாஜக என்ன சாதிக்க முயல்கிறது? இச்சம்பவத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதும், இங்கு அமைதி நிலவுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதும் தெளிவாகிறது” என்று கூறியுள்ளார்.
டெல்லி ஜஹாங்கிர்புரியைப் பார்வையிட சென்ற அசாதுதீன் ஓவைசி – தடுத்து நிறுத்திய காவல்துறை
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மவுனம் காத்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், “பாஜக தலைவர்கள் அளிக்கும் அறிக்கைகளை பாக்கும்போது, அவர்கள் சகிப்பின்மை என்ற சுவரை கட்டி எழுப்ப முயல்கிறார்கள் என்பது தெளிவாகிறது. உச்ச நீதிமன்றம்தான் என் ஒரே நம்பிக்கை” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கட்டடங்களை இடிக்கும் பணிக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்திருந்த நிலையில், உத்தரவு மீறி இடிக்கும் பணியில் வடக்கு டெல்லி மாநகராட்சி ஈடுபட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்து அதன் நகலை அனுப்பிய போது கட்டடங்கள் இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
Source: The Indian Express
கேரளா ஆளுநர் ஆகிறாரா எச்.ராஜா
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.