Aran Sei

ராகுல்காந்தியின் நடைப்பயணத்திற்கு கிடைக்கும் புகழை கெடுக்கவே கொரோனாவை காரணம் காட்டி ஒன்றிய அரசு தடுக்க பார்க்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் நாளை (டிசம்பர் 24) டெல்லிக்குள் நுழைகிறது. ஆனால் நாட்டில் ஒமைக்ரானின் துணை மாறுபாடு வைரஸ் பரவல் கண்டறியப்பட்டு உள்ளதால் இந்த நடைப்பயணத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறும், அது முடியாவிட்டால் நடைப்பயணத்தை ரத்து செய்யுமாறும் ராகுல் காந்திக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒமைக்ரானின் புதிய மாறுபாடு குஜராத் மற்றும் ஒடிசாவில் கடந்த ஜூலை, செப்டம்பர் மற்றும் நவம்பரிலேயே 4 பேரிடம் கண்டறியப்பட்டது.

உலகத்தோடு போட்டிபோட இந்தி உதவாது ஆங்கிலம் படியுங்கள்: ஏழைகளின் ஆங்கிலக் கல்வியை பாஜக பறிக்கிறது – ராகுல் காந்தி குற்றசாட்டு

‘ஆனால் ராகுல் காந்திக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டிசம்பர் 21 அன்று கடிதம் எழுதியிருக்கிறார். பிரதமர் மோடி டிசம்பர் 22 அன்று கொரோனா குறித்த ஆய்வு நடத்தினார். ராகுல் காந்தியின் நாய்ப்பயணம் டிசம்பர் 24 அன்று டெல்லிக்குள் நுழைகிறது. இப்போது இந்த கால வரிசையை புரிந்து கொள்ளுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

நடைப்பயணத்திற்கு கிடைக்கும் புகழை கெடுக்கவே ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ள ஜெய்ராம் ரமேஷ், அறிவியல் மற்றும் மருத்துவ சான்றுகள் அடிப்படையிலான வழிமுறைகள் நடைப்பயணத்தில் பின்பற்றப்படும் என்றும் கூறியுள்ளார்

Source : hindustantimes

டாக்டர் சர்மிகாவின் சங்கி மூளை | டெய்சி அக்காவின் வளர்ப்பு அப்படி | Aransei Roast | Dr Sharmika

ராகுல்காந்தியின் நடைப்பயணத்திற்கு கிடைக்கும் புகழை கெடுக்கவே கொரோனாவை காரணம் காட்டி ஒன்றிய அரசு தடுக்க பார்க்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்