Aran Sei

மக்களை முட்டாள் ஆக்குவதை நிறுத்திவிட்டு, உண்மையான நிவாரணத்தை வழங்குங்கள் – பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து ராகுல் காந்தி கருத்து

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதை நிறுத்தி விட்டு, உண்மையான நிவாரணதை வழங்குங்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பெட்ரோல் விலை மே1, 2020 – ரூ. 69.5, மார்ச் 1, 2022 – ரூ. 95.4, மே 1, 2002 – 105.4, மே 22, 2022 – ரூ. 96.7. இனி பெட்ரோல், டீசல் விலையில் தினமும் 80 காசுகள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

மக்களை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு, அவர்களுக்குத் தேவையான உண்மையான நிவாரணத்தை வழங்குங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

பெட்ரோல் மீதான வரியை கடந்த 60 நாட்களில் ரூ.10 உயர்த்தி, இப்போது அதை ரூ.9.50 குறைத்து மக்களை ஏமாற்றுகிறது பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்நிலையில், இன்று (மே 22) காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப், “மோடி அரசு, நிவாரணம் வழங்குவதை விட அரசியல் வித்தைகள் காட்டுவது அதிக முனைப்பு காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

“பொருளாதாரம் மற்றும் நிதி மேலாண்மை குறித்த பாஜக அரசின், தெளிவின்மையும் நீண்ட காலமாக வெளிப்பட்டு வருகிறது. அதை ஏற்று நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பெறுவதற்குப் பதிலாக, மாயத் தோற்றத்தை உருவாக்க பாஜக தந்திரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது,” என்று வல்லப் குற்றம் சாட்டினார்.

இந்தியாவில் ஜனநாயகம் அழிந்தால் உலகிற்கு ஆபத்து – லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடலில் ராகுல் காந்தி பேச்சு

கடந்த 60 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய்க்கும் அதிகமாக ஏற்றிவிட்டு தற்போது விலையை குறைப்பதாக சொல்வது மக்களை ஏமாற்றும் செயல். விலையைக் குறைப்பது போன்ற ஒரு போலித் தோற்றத்தை அரசு உருவாக்குகிறது என்று அவர் வல்லப் தெரிவித்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை 142 மடங்கு உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள வல்லப், “கடந்த 18 மாதங்களில் சமையல் எரிவாயுவின் விலையை ரூ. 400 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் ரூ. 200-ஐ குறைத்திருப்பது மக்கள் நலன் அல்ல, அவர்களின் ரத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சும் செயல்” என்று குற்றச்சாட்டியுள்ளார்.

Source: The Telegraph India

ரவுடிகளோடு விவாதங்களுக்கு வரும் பாஜக | Vanni Arasu Interview | ABP Nadu | Makizhnan | BJP | Aransei

 

 

.

 

மக்களை முட்டாள் ஆக்குவதை நிறுத்திவிட்டு, உண்மையான நிவாரணத்தை வழங்குங்கள் – பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து ராகுல் காந்தி கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்