”தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது” என திமுக நிர்வாகிகள் பொன்முடி, ஆர்.எஸ். பாரதி, ஆ.ராசா ஆகியோர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
”வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் மையத்தில், வெளிநபர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் வெளிநபர்கள் அனுமதிக்க கூடாது” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 13 ஆம் தேதி அளித்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால், மீண்டும் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.