முஹம்மது நபிகுறித்து அவதூறாக பாஜக உறுப்பினர்கள் கருத்து தெரிவித்ததற்கு அரபு நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. கத்தார், குவைத் மற்றும் ஈரான் நாடுகள் இந்திய தூதர்களை வரவழைத்து இந்த கருத்துக்களை எதிராக அவர்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
இந்த கருத்துக்களுக்கான இந்திய அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் அரசு கோரியுள்ளது.
கருத்து தெரிவித்த உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துள்ளதாகவும், தரக்குறைவான கருத்துக்கள் விளிம்புநிலை சக்திகளின் கருத்துக்கள் மட்டுமே என்று கத்தார் அரசிடம் இந்தியா தெரிவித்துள்ளது.
முஹம்மது நபி குறித்த சர்ச்சை – அரபு நாடுகளில் பாஜகவுக்கு எதிர்ப்பு
கத்தாரை தொடர்ந்து, குவைத்தின் வெளியுறவு அமைச்சகமும் இந்திய தூதரை வரவழைத்து கண்டன அறிக்கையை வழங்கியுள்ளது.
இந்திய தூதர் கதம் தர்மேந்திராவை அழைத்து கண்டனத்தை பதிவு செய்ததாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாஜக உறுப்பினர்களை கண்டித்து வளைகுடா நாடுகளில் பெரிய நாடான சவுதி அரபியாவும் கண்டன அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. 57 உறுப்பினர்களை கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, நபிகுறித்த கருத்துக்களை கண்டித்ததோடு, இஸ்லாமியர்கள்மீது இந்தியா திட்டமிட்ட துன்புறுத்தல்களை நிகழ்த்தி வருகிறது.
நபிகள்குறித்து கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் டெல்லி மாநில ஊடக பிரிவு தலைவர் நவீன் ஜிண்டாலை அடிப்படை உறுப்பினர் பதவியில் இடை நீக்கம் செய்து கட்சி உத்தரவிட்டுள்ளது.
Source: The Wire
Santhanக்கு அடுத்து Lie Detector எனக்கு தான் வெச்சாங்க | Tada Rahim Interview | கைதியின் டைரி – 03
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.