பல்கலைக்கழக மானியக் குழு இந்த கல்வியாண்டு முதல் முதுகலை படிப்புகளுக்கும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் ஜெகதீஷ் குமார் இன்று தெரிவித்துள்ளார்.
45 மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் கட்டாயம். 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் தேவையல்ல என்று பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார்.
“2022 கல்வியாண்டிலிருந்து முதுகலை மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வு ஜூலை மூன்றாவது வாரத்தில் நடத்தப்படும். மேலும் இந்த நுழைவுத் தேர்விற்கான விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்கி ஜூன் 18 ஆம் தேதி முடிவடையும்” என்று ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கணினி முறையில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்
Source : thehindu
காசி ஆனந்தனின் தியாகத்தை கொச்சை படுத்த முடியாது | Thiruma Speech
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.