டெல்லி ஜஹாங்கிர்புரி சம்பவம் நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் ஒட்டுமொத்த அடையாளம் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவர், “டெல்லி ஜஹாங்கிர்புரி சம்பவம் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டின் ஒட்டு மொத்த அடையாளம். ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற புதிய உத்தியின் மூலம் இஸ்லாமியர்கள், ஏழைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவ இடத்திற்கு காங்கிரஸ் குழு தாமதமாக சென்றதாகவும் பிருந்தா காரத்தும் ஓவைசியும் தான் முதலில் சென்றதாகவும் கூறுகின்றனர். யார் யார் சென்றனர்? முதலில் யார் சென்றனர்? என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், காங்கிராஸ் குழு அங்கு சென்றது. ஒரு வேளை அதில் தாமதமிருந்தால் அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன்” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஜஹாங்கிர்புரி வன்முறை: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்துக்களும் இஸ்லாமியர்களும் பேரணி
நான் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பேசுகிறேன். அதில் மதச் சாயம் பூசாதீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.
“ஒவ்வொரு நகராட்சியிலும், பஞ்சாயத்திலும் ஆக்கிரமிப்புகள் குறித்த தகவல் சேகரிப்பு தொடங்கி, சட்டவிரோத கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பின்னர் அகற்றப்படுவது என எல்லாவற்றிற்குமே சட்ட திட்டங்கள் உண்டு. ஆனால், ஜஹாங்கிர்புரியில் அப்படி ஏதும் பின்பற்றப்பட்டுள்ளதா?. அதனால் தான் இதை சட்டம், ஒழுங்கு விதிமீறல் எனக் கூறுகிறோம்” என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Source: The Hindu Tamil
இளையராஜா பேச்சை பொருட்படுத்தக்கூடாது – திராவிடர் கழகத் தலைவர் கீ.விரமணி நேர்காணல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.