Aran Sei

‘புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வாழ்வாதாரம்’ – உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒன்றிய, மாநில அரசுகள்

புலம்பெயர் தொழிலாளர்களின் உணவு மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பின்பற்ற வில்லை என்று மனித உரிமை உரிமை ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கொரோனா முழு முடக்கக் காலத்தில் “புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைகள் மற்றும் துயரங்கள்” தொடர்பாக 2020 இல் மனித உரிமை ஆர்வலர்களான ஹர்ஷ் மந்தர், அஞ்சலி பரத்வாஜ் மற்றும் ஜக்தீப் சோக்கர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையில் 2021 ஜூன் 29, அன்று, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது.

டெல்லி கலவரத்தில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் முக்கிய இடங்களில் சமூக சமையலறைகளை நடத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களுக்குச் சுகாதாரமான, சமைத்த உணவை வழங்க வேண்டும். கொரோனா தொற்றுநோய் இருக்கும் வரை ஒவ்வொரு மாநிலங்களும் இந்த 2 நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஒன்றிய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் இந்த வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார்.

“இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளை விதித்து வருகின்றன. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பௌத்தர்கள், சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை ‘இந்து வெறுப்பு’ என்று அங்கீகரிக்க வேண்டும் : ஐ.நா.வுக்கான இந்திய தூதர் வலியுறுத்தல்

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் அளவை அதிகரிப்பது குறித்து ஒன்றிய அரசு எந்த முயற்சியையும் இதுநாள் வரை எடுக்கவில்லை என்று மனுதாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தெலுங்கானா மற்றும் மேகாலயா மட்டுமே உச்சநீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த ஒன்றிய அரசிடம் கூடுதல் உணவு தானியங்களைக் கேட்டுள்ளன. ஆனால் அதைக்கூட ஒன்றிய அரசால் கொடுக்கவில்லை.

ம.பி. காவல்துறையில் அலுவல் மொழியாக இந்தி – பிற மொழிகளுக்குத் தடை விதித்த பாஜக அரசு

ஜூன் 29 அன்று உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்தக் கோரும் மனுவை விரைவில் பரிசீலிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குறிப்பிட்டுள்ளார்.

Source The Wire

‘புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வாழ்வாதாரம்’ – உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒன்றிய, மாநில அரசுகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்