Aran Sei

கோவையில் காவல்துறையை தாக்கியதாக ஆர்எஸ்எஸ் மீது புகார் – தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கு.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்

காவல்துறை உதவி ஆணையாளர் ஜெயச்சந்திரன் அவர்களையும் காவல் துறையினரையும் தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கோவை விளாங்குறிச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் 8 நாட்களாக ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளியில் நடைபெற்று வந்தது. அப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காவல்துறையினரை  தாக்கியுள்ளனர். அவர்கள் ,மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளியில் ஆர்எஸ்எஸ் கும்பலால் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உடனடியாக சோதனையிட வேண்டும்

கோவை விளாங்குறிச்சி யில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் மதவெறி வன்முறை பயிற்சி நடப்பதை ஆய்வு செய்ய அந்தப் பள்ளிக்குள் செல்ல முயன்ற காவல்துறை உதவி ஆய்வாளர் திரு ஜெயச்சந்திரன் அவர்களையும் காவல் துறையினரையும் பள்ளிக்குள் செல்லவிடாமல் தடுத்தும் அநாகரிகமாக பேசியும், தாக்குதல் நடத்தவும் முயற்சித்துள்ளனர்

காவல்துறை உயர் அதிகாரியை தாக்க முயற்சித்த ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி அமைப்பினரை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் ஸ்ரீ  தர்மசாஸ்தா பள்ளியில் காவல்துறை உயர் அதிகாரிகளை நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியதின் நோக்கம் என்ன? பள்ளியில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடக்கின்றதா? தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய பள்ளியை உடனடியாக சோதனையிட வேண்டும்.

தமிழக அரசும் கோவை மாவட்டத்தின் கடந்தகால சம்பவங்களை நினைவில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கோவையில் காவல்துறையை தாக்கியதாக ஆர்எஸ்எஸ் மீது புகார் – தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கு.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்