Aran Sei

எரிபொருள் விலையேற்றம்: ‘பேருந்துகளில் போகும் பொதுமக்கள் பழகிக்கொள்வார்கள்’ – பாஜக தலைவர்

பொது மக்கள் அனைவரும் பொது போக்குவரத்தையே பயன்படுத்துவதால், எரிபொருள் விலை உயர்வு அவர்களைப் பாதிக்காது என்று பாஜக தலைவரும் பீகார் மாநில அமைச்சருமான நாராயண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

நேற்று (பிப்பிரவரி 19), செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “பொது மக்கள் பெரும்பாலும் பேருந்துகளையே பயன்படுத்துகிறார்கள். வெகு சிலர் மட்டுமே தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆகவே, எரிபொருள் விலை உயர்வு குறித்து பிரச்சனை செய்வது அரசியல்வாதிகள் தானேயன்றி, சாதாரண பொது மக்கள் அல்ல.” என்று கூறியுள்ளதாக என்டிடிவி  செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் 90 ரூபாயை தொட்டது பெட்ரோல் விலை – சில மாநிலங்களில் லிட்டர் 100 ரூபாய்க்கு விற்பனை

மேலும், “மக்கள் பணவீக்கத்திற்கும் விலைவாசி உயர்வுக்கும் பழக்கமாகிவிட்டார்கள். எரிபொருள் விலையுயர்வு என்னையும் பாதிக்கதான் செய்கிறது. ஆனால், மக்கள் இதையும் பழக்கப்படுத்திக்கொள்வார்கள்.” என்று நாராயண் பிரசாத் குறிப்பிட்டுள்ளதாக என்டிடிவி  தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 11 வது நாளாக உயர்ந்துள்ளதை தொடர்ந்து, சில இடங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100-ஐ தொட்டுள்ளது.

“பெட்ரோல் விலை உயர்வு மோடியின் ராஜதந்திரம்” – பாராட்டிய மத்திய பிரதேச அமைச்சர்

நாட்டில், எரிபொருட்களின் விலை, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்திருப்பதை கட்டுப்படுத்தும் வகையில், கலால் வரிகளைக் குறைப்பதற்கான திட்டம் மத்திய அரசிற்கு இல்லை என்று நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்  மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிப்ரவரி 17 ஆம் தேதி, எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி கட்டுப்பாடு விதிகளைத் தளர்த்திக்கொள்ள வேண்டும் என்று தர்மேந்திர பிரதான் கோரிக்கை விடுத்திருந்தார்.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் – மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலையின் மாற்றத்திற்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, தினசரி நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலையேற்றம்: ‘பேருந்துகளில் போகும் பொதுமக்கள் பழகிக்கொள்வார்கள்’ – பாஜக தலைவர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்