Aran Sei

போலியான செய்தி பரப்பிய குஜராத் பாஜக பொதுசெயலாளர் – உண்மைக் கண்டறியும் ஆய்வில் அம்பலம்

இந்தப் பதிவிற்கு பலரும்  தங்கள் பாராட்டுகளையும் சந்தேகங்களையும்  தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்ட செய்தி  போலியானது என்றும், இந்தச் சுரங்கப்பாதை  கேரளாவின் திருச்சூருக்கும் பாலக்காட்டிற்கும் இடையில் அமைக்கப்பட்ட  குதிரன் சுரங்கப்பாதை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தச் சுரங்கப்பாதை தொடர்பாக  இந்திய  சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவின் வழியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 31-ம் அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ள நிதின்கட்கரி, ” கேரளாவில் உள்ள குதிரன் சுரங்கப்பாதையின் ஒரு பக்கத்தை இன்று திறக்கிறோம். இது மாநிலத்தின் முதல் சுரங்கப்பாதை சாலை. இது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கான இணைப்பை மேம்படுத்தும். 1.6 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை பீச்சி-வாசஹானி வனவிலங்கு சரணாலயம் வழியாக வடிவமைக்கட்டுள்ளது ” எனக் கூறியுள்ளார்.
திருச்சூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள குதிரன் சுரங்கப்பாதை சாலை திருச்சூர் மற்றும் பாலக்காடு சாலையில் இணைக்கப்பட்டு இருக்கிறது. இச்சாலை மலையைச் சுற்றி செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும், விபத்தையும் குறைக்கவே உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில்,  குஜராத் பாஜக பொதுச்செயலாளர் ரத்னாகர் போலியான செய்தியைப் பரப்பியுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

source: YOUTURN 

தொடர்புடைய பதிவுகள்:

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம்: பாஜக தலைவரை கைது செய்யவுள்ளதாக காவல்துறை தகவல்

என்.எஸ்.ஓ குழுமத்துடன் எந்த பரிவர்த்தனையும் இல்லை – மாநிலங்களவையில் கேட்டப்பட்ட கேள்விக்கு பாதுகாப்பு துறை இணையமைச்சர் பதில்

 

போலியான செய்தி பரப்பிய குஜராத் பாஜக பொதுசெயலாளர் – உண்மைக் கண்டறியும் ஆய்வில் அம்பலம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்