Aran Sei

கோவை: நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட இளநிலை மருத்துவர்

Image Credits: India TV

முதுநிலை நீட்(PG NEET) தேர்வு அச்சத்தால் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 30) இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ராசி (வயது 27) இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகின்றன. ராசி கடந்த 2020ஆம் ஆண்டு இளநிலை மருத்துவம் (MBBS).படித்து முடித்துள்ளார்.

மேற்கொண்டு முதுநிலை மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார்.  மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி நீட் தேர்வுக்கு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (மே-19) மருத்துவர் ராசி வீட்டின் மூன்றாவது மாடியில் படிக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

#Sadhguru_not_welcome – இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என ஓமனில் ஜக்கி வாசுதேவுக்கு எதிர்ப்பு

நீண்ட நேரம் ஆகியும் ராசி இருந்த அறையில் இருந்து வெளியே  வரவில்லை என்பதால்  சந்தேகமடைந்த அவரது தாயார், டாக்டர் செந்தாமரை (இவரும் மருத்துவர்)  மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கதவு உள்பக்கம் தாழிட்டிருந்ததால் அருகில் இருந்த  ஜன்னல் வழியாக பார்த்த போது, ராசி மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

ஊராட்சி மன்றத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திருத்தம் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது குறித்து மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு  தகவல் தெரிவித்தனர்.  அங்கு விரைந்து வந்த காவல்துறியினர் அறைக்கதவை உடைத்து மருத்துவர் ராசியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 6 வது மாதத்தில் பெண் மருத்துவர் ராசி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ.விற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

Source: News18Tamilnadu

சவுக்கை சுழற்றும் நெஞ்சுக்கு நீதி | Nenjukku Neethi Review

கோவை: நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட இளநிலை மருத்துவர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்