“அக்டோபர் 2021 முதல் இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது. தற்போது இந்தியாவில் நிலவிவரும் நிலக்கரி பற்றாக்குறைக்கு மத்தியில் வீடுகளுக்குத் தேவையான மின்சார தேவை 38 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது” என்று அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சைலேந்திர துபே தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிகரிக்கும் நிலக்கரி பற்றாக்குறை – இருளில் மூழ்கும் மாநிலங்கள்
இந்தியாவில் நிலவி வரும் நிலக்கரி பற்றாக்குறையால் மின்சார உற்பத்தி தடைப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்வெட்டு நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் காற்றாலை உற்பத்தியும் குறைந்துள்ளதாகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களிலிருந்து எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி நாள் ஒன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.
நிலக்கரி பற்றாக்குறைக்கு யார் காரணம்? – தனியார் முதலாளிகளா? அரசா?
ஒன்றிய அரசின் மின் தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்கப்படாததே மின்வெட்டுக்குக் காரணம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் மின் தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுமார் 750 மெகாவாட் மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
“மின் நிலையங்களில் போதிய அளவு நிலக்கரி இல்லாததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் 12 மாநிலங்களில் அடுத்த 12 நாட்களில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாக” அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சைலேந்திர துபே தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு: பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் குற்றச்சாட்டு
“2021-ல் 1.1 சதவீதமாக இருந்த மின் பற்றாக்குறை ஏப்ரல் 2022-ல் 1.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட், ஹரியானா, உத்தரபிரதேசம், பீகார், தெலுங்கானா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் விரைவில் கடுமையான மின்வெட்டு ஏற்படும்,” என்று சைலேந்திர துபே கூறியுள்ளார்.
“ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மின் தடையின் அளவு 3 சதவீதம் முதல் 8.7 சதவீதமாக இருக்கும். உத்தரப் பிரதேசத்தில் மின்சாரத் தேவை ஏற்கனவே 21,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது. ஆனால், அங்கு மின்சாரம் 19,000 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது” என்று அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சைலேந்திர துபே தெரிவித்துள்ளார்.
Source : DT Next
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.