டூல்கிட் வழக்கில் தொடர்பிருப்பதாக, குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மற்றும் சூழலியல் செயல்பாட்டாளர் சாந்தனு முலுக் டெல்லி காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
பிப்ரவரி 22 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி காவல்துறை நோட்டீஸ் வழங்கியிருந்த நிலையில், துவாரகாவில் இருக்கும் டெல்லி சைபர் பிரிவு அலுவலகத்தில் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகினர்.
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சூழலியல் செயல்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க், கூகுள் டூல்கிட் (விவர ஆவணம்) ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருர்ந்தார்.
இது தொடர்பாக கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிந்த நிலையில், இந்த டூல்கிட்டை திருத்தம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, சூழலியல் ஆய்வாளர் தீஷா ரவி, வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப், சூழலியல் செயல்பாட்டாளர் சாந்தனு முலுக் ஆகியோர் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இதில் தீஷா ரவி பெங்களூருவில் பிப்ரவரி 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, நிகிதா ஜேக்கப் மற்றும் சாந்தனு முலுக் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.