2002 குஜராத் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு, இழப்பீடு கோரிய மனு உள்ளிட்ட வழக்குகள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டதாக கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முடித்து வைத்துள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டில் எழுந்த உத்தரபிரதேச அரசு மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை இன்று உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபர் மசூதி நிலத் தகராறு வழக்கில் 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கருத்தில் கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் விபத்திற்கு பிறகு இஸ்லாமியர்களின் மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் வகுப்புவாத கலவரங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
2002 குஜராத் கலவர வழக்குகளில் “அப்பாவி மக்களை” சிக்கவைக்க ஆதாரங்களை ஜோடித்ததாக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : hindustantimes
பறந்து போன சாவர்க்கர் | புல்புல் பறவை பாவமில்லையா? | Aransei Roast | savarkar | RSS | BJP | Bulbul
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.