Aran Sei

இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் எங்களுக்கு உதவாது – வங்காளதேசத்தின் இந்துத் தலைவர் கருத்து

Credit: The Hindu

ங்களுக்கு இருக்கும் சவால்களை சமாளிக்க, இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உதவாது என்று வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து சமூகத்தின் தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து சென்ற பத்திரிக்கையாளர்கள் குழுவுடன் உரையாடிய மோகனகர் சர்போஜோன் பூஜா கமிட்டியின் தலைவர் மோனிந்திர குமார் நாத், சிறுபான்மை விவகார அமைச்சகம் மற்றும் சிறுபான்மை மத சமூகங்களுக்கு சிறப்பு நிரந்தர ஆணையம் அமைப்பது  உண்மையான நோக்கம் என்று கூறியுள்ளார்.

வங்காளதேச இந்து, பௌத்த, கிறுஸ்துவ ஒற்றுமை கவுன்சிலின் இணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகிக்கும் மோனிந்தர குமார், “இந்தியாவின் இந்த சிறப்புச் சட்டத்தை நாங்கள் வரவேற்கவில்லை. இத்தகைய சட்டங்கள் பயனுள்ளதாக இருக்காது. மற்றவர்களைப் போலவே எங்களுக்கும் சில பிரச்னைகள் உள்ளன.” என்று குறிப்பிட்டுள்ளார்.

’தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை’: திரைக்கலைஞர் நசிருதீன் ஷா கருத்து

மேலும்,”வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் இங்கேயே இருப்போம். யாரும் தனது தாய்நாட்டில் இருந்து அண்டை நாட்டில் தஞ்சமடைய விரும்பவில்லை. மிகவும் துரதிருஷ்டவசமான சூழ்நிலைகளில் மட்டுமே மக்கள் தங்கள் வேர்களை விட்டுச் செல்கிறார்கள், அத்தகைய சூழ்நிலைகளில் அவர்களின் எதிர்காலம்குறித்து எந்த நிச்சயமும் இல்லை. எங்கள் நாட்டிற்குள் ஒரு ஒருங்கிணைந்த முறையில் எங்கள் சமூகத்தை அணிதிரட்டுவதன் மூலம் எங்களிடம் உள்ள சவால்களை நாங்கள் சமாளிப்போம்” என்று மோனிந்திர குமார் நாத் தெரிவித்துள்ளார்.

Source: The Hindu

Nupur Sharma வ ஏன் இன்னும் கைது பண்ணல? Aloor Shanavas Interview | Nupur Sharma Comment on Muhammad

 

இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் எங்களுக்கு உதவாது – வங்காளதேசத்தின் இந்துத் தலைவர் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்