Aran Sei

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது: முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்

ர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச்சட்டம் கேரளாவில் அமல்படுத்தப் படாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் மீண்டும் ஆட்சியை பிடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓராண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய பினராயி விஜயன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் – ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

“இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நமது நாடு செயல்பட்டு வருகிறது. ஆனால் அண்மைக்காலங்களில், மதச்சார்பின்மையை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை நிர்ணயிக்கும் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கேரளா அரசு கொண்டுள்ளது என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

“மக்களிடையே வகுப்புவாத பதட்டத்தை உருவாக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இங்கே, நமது சமூகத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பங்களை அடையாளம் காண ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source : NDTV

அடித்த கொள்ளையில் பங்கு வெளிவராத உண்மைகள் I Karikalan Interview

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது: முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்