Aran Sei

மாஸ்டர் : கொரோனா அடைப்புக்கு பிறகு நம்பிக்கை ஊட்டிய வரவேற்பு – ஷியாம் சுந்தர்

டிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பொங்கல் தினத்தையொட்டி ரிலீஸ் செய்யப்பட்ட மாஸ்டர் திரைப்படம் எவ்வாறு வசூல் செய்யப் போகிறது என்ற கேள்வி திரைத்துறை மத்தியில் இருந்தது.

திரையரங்குகள் முழு கொள்ளளவுடன் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்ற தமிழக அரசின் ஆணை நீதிமன்ற மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலால் திரும்ப பெறப்பட்டது. இதன் காரணமாக திரையரங்குகள் பாதி அளவு கொள்ளளவு மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். பாதி கொள்ளளவு கொண்ட திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்தால் லாபம் ஈட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

“புரட்சியின் கப்பல் போட்டம்கின்” – 95 ஆண்டுகள் கடந்தும், சிறந்த படங்களின் பட்டியலில் நீடிக்க காரணம் என்ன?

பொங்கல் பண்டிகை அன்று படம் ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அறிவித்த பிறகு பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்றாலும் படம் என்ன வசூல் கொடுக்கும் என்ற ஆவல் அனைவரிடத்திலும் இருந்தது. படம் ரிலீஸான 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் விபரங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

உலக அளவில் மாஸ்டர் படம் ரூ 200 கோடி வசூலைத் தாண்டி விட்டதாக இந்து தமிழ் திசை செய்தி தெரிவிக்கிறது. கொரோனா காலத்தில் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது இதன் மூலம் அறிய முடிகிறது.

‘தாண்டவ்’ வெப் சீரிசை தொடர்ந்து ‘மிர்சாப்பூர்’ தொடருக்கு எதிர்ப்பு – தடை செய்ய கோரும் மனுவில் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

திரையரங்குகளில் பாதி கொள்ளளவு அனுமதிக்கப்பட்டாலும் பல திரையரங்குகள் முழு அளவு பார்வையாளர்கள் உடன் படத்தை வெளியிட்டதாக பல இடங்களில் குற்றச்சாட்டு கிளம்பியது. சென்னையில் காசி திரையரங்கில் அதிக பார்வையாளர்கள் உடன் திரையிட்ட காரணத்திற்காக 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாலை முதல் பல சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன. பிளாக்கில் அதிக விலைக்கு டிக்கட்டுகள் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுபோல பல பிரச்சனைகள் சுட்டிக் காட்டப் பட்டாலும் கூட படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது திரை உலகத்தை நிமிர்ந்து உட்கார செய்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் விஜய் படம் ஆந்திராவில் மிகப்பெரிய மார்கெட் கொண்டதாக இருந்தது இல்லை. ஆனால் மாஸ்டர் திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் விடுமுறை நாட்களில் மட்டும் 11 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

கார்த்திக்ராஜா எனும் கானதேவன் – வள்ளியப்பன் நடேசன்

இந்தப் படத்தின் வெற்றி புதிய படங்கள் திரையரங்குகளுக்கு வருவதற்கு அதிக நம்பிக்கையை கொடுத்துள்ளது. கொரோனா பயம் காரணமாக மக்கள் படம் பார்க்க வருவார்களா என்ற தயக்கம் அனைத்து திரை தயாரிப்பாளர்களுக்கும் இருந்தது. அந்தத் தயக்கத்தை பலமாக நடிகர் விஜய் உடைத்துள்ளார். நல்ல படம் பார்ப்பதற்கு ரசிகர்கள் எப்பொழுதும் திரையரங்குக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை திரைத்துறைக்கு ஏற்பட்டுள்ளது. இது பல புதிய படங்கள் வெளியானதற்கு வாய்ப்பினை திறந்து வைத்துள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஈடாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்தி படங்களில் தான் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் சமமாக வெளிவரும். பழைய கமல், ரஜினி போன்றோரின் படங்களில் பிரபு போன்ற சமகால நடிகர்கள் இணைந்து நடித்து இருந்தாலும் அவர்களுக்கு ஈடான வாய்ப்பு வழங்கப்படவில்லை. பேட்டை திரைப்படத்திலும் ரஜினி மற்றும் விஜய் சேதுபதி நடித்து இருந்தாலும் விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சக நடிகர் விஜய் சேதுபதிக்கு சமமான பங்களிப்பை கொடுத்ததன் மூலம் 2 ஹீரோ சப்ஜெக்ட் அதிக அளவு வரும் வாய்ப்பினையும் மாஸ்டர் திரைப்படம் கொடுத்துள்ளது.

“இது என் வாழ்க்கையையே ஓடவைத்த தியேட்டர் அய்யா” – மிஷ்கினின் நினைவலைகள்

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல தொழில்கள் நசிந்து உள்ளன. அதில் திரைத்துறை முதலிடத்தில் உள்ளது. திரையரங்குகளும் மக்கள் அச்சமின்றி படம் பார்ப்பதற்கு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியாக கடைப்பிடித்து திரைப்படங்களை பார்க்க வேண்டும். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியானது, ‘எல்லாம் கடந்து போகும்’ என்ற பாசிட்டிவ் சிந்தனையை திரைத்துறைக்கு கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.

(கட்டுரையாளர் ஷியாம் சுந்தர் ஐடி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிபவர்)

மாஸ்டர் : கொரோனா அடைப்புக்கு பிறகு நம்பிக்கை ஊட்டிய வரவேற்பு – ஷியாம் சுந்தர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்