Aran Sei

இஸ்லாமியர்களைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களைக் குறிவைக்கும் இந்துத்துவாவினர்- ப.சிதம்பரம்

நேற்று (29.12.2021) அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் (MoC) வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, “இஸ்லாமியர்களுக்குப் பிறகு இந்துத்துவாவின் புதிய இலக்காக கிறிஸ்தவர்கள் மாறியுள்ளார்கள்” என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி (MoC) தொடர்பாக உள்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கையை முக்கிய ஊடகங்கள் பேசாதது வெட்கக்கேடானது மற்றும் வருத்தமளிக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

“மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது என்பது இந்தியாவில் உள்ள ‘ஏழைகள் மற்றும் அவலத்திற்குரிய’ மக்களுக்குச் சேவை செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான நேரடியான தாக்குதலாகும்” என்று ப. சிதம்பரம் டிவிட்டரில் கூறியுள்ளார்.

கிறிஸ்தவ தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுகிறது. இஸ்லாமியர்களுக்குப் பிறகு இந்துத்துவாவின் புதிய இலக்காக கிறிஸ்தவர்கள் மாறியுள்ளார்கள் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Source: the hindu

இஸ்லாமியர்களைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களைக் குறிவைக்கும் இந்துத்துவாவினர்- ப.சிதம்பரம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்