Aran Sei

‘கிறிஸ்தவ தேவாலயங்களை புல்டோசரால் இடித்துத் தகர்க்க வேண்டும்’ – ஸ்ரீராம் சேனா தலைவரின் கருத்துக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

ர்நாடகாவில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களை புல்டோசர் கொண்டு தகர்க்கவேண்டும் என்ற ஸ்ரீராம் சேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் விடுத்த அழைப்பை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் இலியாஸ் தும்பே வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இதுதொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தினமும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் ஏமாற்றப்பட்டு கிறிஸ்தவர்களாக மாற்றப்படுவதாகவும், இந்த மதமாற்றத்தை தடுக்க சட்டவிரோத தேவாலயங்களை புல்டோசர் மூலம் தகர்க்க வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் உள்ள சட்டவிரோத தேவாலயங்களின் பட்டியலைத் தொகுத்துள்ளதாகவும், அவற்றை இடிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் முத்தலிக் கூறியுள்ளார்.

கியானவாபி மசூதி: ஆய்வுத் தகவல்களை ஊடகங்களுக்கு கசிய விட்ட ஆய்வுக்குழு ஆணையரை நீக்கிய வாரணாசி நீதிமன்றம்

தேவாலயங்களை புல்டோசர் கொண்டு தகர்க்கும் அச்சுறுத்தல், மாநிலம் முழுவதும் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகளை தடை செய்யுமாறு கர்நாடக அரசுக்கு ஸ்ரீ ராம் சேனை இறுதி எச்சரிக்கை விடுத்த சில நாட்களுக்குப் பிறகு வருகிறது. கடந்த வாரம், ஸ்ரீ ராம் சேனை உறுப்பினர்கள் மைசூருவில் அதிகாலையில் சுப்ரபாதம் (இந்து காலை மந்திரம்) அமர்வுகளை நடத்தினர். தொழுகைக்கான பாங்கு எனும் அழைப்புக்கு ஒலிபெருக்கிகளை தொடர்ந்து பயன்படுத்தினால் அதன் விளைவுகள் குறித்து முஸ்லிம் சமூகத்தை அவர்கள் எச்சரித்தனர்.

இந்து அல்லாத சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள், அத்தகைய இடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை இடித்தல் மற்றும் இடிப்பது போன்ற செயல்கள் தற்கால இந்தியாவின் மதிப்பை இழந்த செய்தியாக இருந்தாலும், அது வலதுசாரி தீவிரவாதிகளின் முயற்சிகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய முயற்சி மிகவும் ஆபத்தானது மற்றும் வகுப்புவாத தூண்டலை இன்னும் மோசமாக்குகிறது.” என தெரிவித்தார்.

மேலும், “மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த  2014 ம் ஆண்டுக்குப் பிறகு, நாட்டில் இந்து அல்லாத மத சமூகங்களுக்கு எதிராக பாசிச சக்திகளின் வகுப்புவாத தூண்டல்  அழைப்புகள், அறிக்கைகள் மற்றும் செயல்கள் இல்லாமல் ஒரு நாள் கூட கடந்ததில்லை. இவ்வாறான வெறுப்புச் செயல்களைத் தடுத்து நிறுத்தி, நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்களின் அமைதியான சகவாழ்வையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய அரசாங்கம், இந்த சமூக விரோதிகளுக்கு முழு ஆதரவையும் பாதுகாப்பையும் அளித்து வருவதுதான் இந்த விஷமத்தனமான வகுப்புவாதச் செயல்களின் வேதனைக்குரிய பகுதியாகும்.” என அவர் தெரிவித்தார்..

கர்நாடகா: ‘ஜுமா மசூதி முன்பு அனுமன் கோயிலாக இருந்தது, ஆகவே அங்கு பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்’ – இந்துத்துவாவினர் கோரிக்கை

நாட்டில் உள்ள மதச்சார்பற்ற சக்திகள், சோம்பலில் இருந்து விடுபட்டு இத்தகைய பாசிஸ்டுகளை எதிர்க்காவிட்டால், நாட்டின் மதச்சார்பற்ற அமைப்பு இழக்கப்படும் என்றும், பரஸ்பர அன்பிற்குப் பதிலாக பரஸ்பர விரோதச் சூழல் உருவாகும் என்பதை எஸ்டிபிஐ கட்சி நினைவூட்டுகிறது என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் இலியாஸ் தும்பே தெரிவித்துள்ளார்.

Gyanvapi Shivling Found – Justice Hari Paranthaman Interview

‘கிறிஸ்தவ தேவாலயங்களை புல்டோசரால் இடித்துத் தகர்க்க வேண்டும்’ – ஸ்ரீராம் சேனா தலைவரின் கருத்துக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்