Aran Sei

இந்தியாவின் வர்த்தக கூட்டாளிகளில் சீனா முதலிடம் – எல்லை பிரச்சனைக்குப் பிறகும் உயர்ந்துள்ள வர்த்தகம்

டந்த ஆண்டின், இந்தியாவின் முதன்மை வர்த்தக கூட்டாளியாக சீனா இருப்பதாக, ப்ளூம்பெர்க் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவுடனான எல்லை பிரச்னைக்குப் பிறகு, அந்நாட்டுடனான வர்த்தக உறவைக் குறைத்து கொள்ள இந்தியா முயன்று வந்தாலும், அந்நாட்டில் இருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்வதால், இந்தியாவுடன் வர்த்தம் செய்யும் நாடுகளில், தொடர்ந்து சீனா முதலிடத்தில் இருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியா- சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட இருவழி வர்த்தகத்தின் மதிப்பு கடந்த ஆண்டில் 7,770 கோடி அமெரிக்க டாலராக இருப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலைகள் முடக்கப்பட்டால் மீண்டும் குரல் கொடுப்பேன் – பாஜக முன்னாள் எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா மீண்டும் சர்ச்சை கருத்து

இது அதற்கு முந்தைய ஆண்டான 8,550 கோடி அமெரிக்க டாலரை விடக் குறைவாக இருந்தாலும், அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்ட வர்த்தகமான 7,590 கோடி அமெரிக்க டாலர்களை விட அதிகமாக இருப்பதால், சீனா முதலிடத்தில் இருக்கிறது, என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

சீனாவுடனா எல்லைப்பிரச்னைக்கு பிறகு, மோடி தலைமையிலான மத்திய அரசு 100க்கும் மேற்ப்பட்ட சீன செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது.

சீனாவில் இருந்து வரும் முதலீடுகளுக்கு வழங்கும் ஒப்புதல்களை குறைத்த போதிலும், சீனாவில்  தயாரிக்கப்படும் கனரக இயந்திரங்கள், தொலைத்தொடர்பு  சாதனங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் ஆகிவற்றின் இறுக்குமதியால் மட்டும், 2020 ஆம் ஆண்டில் 4,000 கோடி அமெரிக்க டாலர்கள் வர்த்தகம் நடைபெற்று இருப்பதாக, ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலை குறைந்தால் “ராமரும் மகிழ்ச்சியடைவார்” – சிவசேனா கருத்து

சீனாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மொத்த இறக்குமதியின் மதிப்பு, 5, 870 கோடி அமெரிக்க டாலர்களாக இருப்பதாகவும், இது அடுத்த இரண்டு இடங்களில் இருக்கும் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியின் கூட்டுத்தொகையை விட அதிகம் என ப்ளூம்பெர்க் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து செய்யப்பட்ட இறக்குமதியில் 51 விழுக்காடு கனரக வாகனங்கள் என்றும், சீனாவுடனா இறக்குமதி மட்டுமல்லாமல் ஏற்றுமதியும் 11 விழுக்காட்டிற்கு அதிகரித்திருப்பாதவும், அந்த செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்சார்பு திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட துறைகளில் புதிய திறன்களை உருவாக்க, குறைந்தது நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும். அதுவரை இந்தியா சீனாவை நம்பியிருப்பது தொடரும்” எனச் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டுத்துறையை சேர்ந்த பொருளாதார நிபுணர் அமிதேண்டு பாலித் தெரிவித்திருப்பதாக ப்ளூம்பெர்க் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் வர்த்தக கூட்டாளிகளில் சீனா முதலிடம் – எல்லை பிரச்சனைக்குப் பிறகும் உயர்ந்துள்ள வர்த்தகம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்