Aran Sei

தனது அறிவிப்புகளால் எதிர்க்கட்சி தலைவர்களை ஓடவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரையே சட்டசபையில் ஓடவைத்தார் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

னது அறிவிப்புகளால் எதிர்க்கட்சி தலைவர்களை ஓடவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் ஆளுநரையே ஓட வைத்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தென் சென்னை திமுக சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 11 பகுதிகள் மற்றும் 2 ஒன்றிய அளவில் கடந்த ஒரு மாத காலமாக 3 ஆயிரம் அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் வகையில் சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகர் விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்ட இளைஞர் திருவிழாவாக கொண்டாடப்பட்டது.

சட்டப்பேரவையை விட்டுப் பாதியில் வெளியேறிய ஆளுநர்: ட்விட்டரில் டிரெண்டாகும் ‘#GetOutRavi’

விழாவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற வேளச்சேரி மேற்கு பகுதியை சேர்ந்த மன்சூர் பாய்ஸ் அணியினருக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும், 2-வது இடம் பிடித்த சோழிங்கநல்லூர் மேற்கு பகுதியை சேர்ந்த எஸ்.வி.ஆர்.செலக்ட் அணிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கி கவுரவித்தார்.

இதே போன்று, பகுதி மற்றும் ஒன்றிய அளவில் முதல் 2 இடங்களை பெற்ற அணிகளுக்கு முறையே தலா ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகைகளையும் வழங்கினார்.

சட்டப்பேரவையை விட்டு வெளியேறிய ஆளுநர் தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்பதே தமிழ்நாட்டின்‌ விருப்பம் – கே.பாலகிருஷ்ணன்

இவ்விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாடு சட்டசபையில் வரலாற்றில் இல்லாத நிகழ்வை நமது தலைவர் (மு.க.ஸ்டாலின்) சமாளித்து இருக்கிறார். பொதுவாக தலைவர் தமது பதில்கள் மற்றும் அறிவிப்புகளின் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களைத்தான் ஓட விடுவார். இன்று (ஜனவரி 9) நமது ஆளுநரையே ஓட வைத்தார் நமது தலைவர். அப்படிப்பட்ட முதல்-அமைச்சர் தினமும் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்து, அதே நேரத்தில் நமது உரிமைகள் பறிபோனால் அதற்கு குரல் கொடுக்கும் இந்தியாவிலேயே முதன்மையான முதலமைச்சராக திகழ்கிறார்” என்று அமைச்சர் உயத்தநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Whatsapp rumour on Governor RN Ravi Stand on Tamilnadu Government I MK Stalin I Annamalai I BJP

தனது அறிவிப்புகளால் எதிர்க்கட்சி தலைவர்களை ஓடவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரையே சட்டசபையில் ஓடவைத்தார் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்