Aran Sei

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து ஆபாச காணொளி – பாஜக பிரமுகர் கைது

மூக வலைத்தளங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை பற்றி அவதூறாக காணொளி வெளியிட்ட பாஜக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமூக வலைத்தளமான ட்விட்டரில் ரஞ்சித்குமார் என்பவருக்கு திருநின்றவூர் கொசவன்பாளையம் பாரதியார் தெருவில் வசிக்கும் பாஜக பிரமுகர் பூபதி (32) என்பவர் தமிழக முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தை பற்றியும், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட சாதி குறித்தும் அவதூறாகவும், ஆபாசமாகவும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் வகையில் பேசி அதை காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

இதனை தொடர்ந்து ஆர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுகவில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ள பிரேம் ஆனந்த் (வயது 44) என்பவர் திருநின்றவூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், திருநின்றவூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து பூபதி வெளியிட்ட காணொளிப் பதிவுகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை செய்தனர். பின்னர் பூபதியை கைது செய்து, அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

சாத்தான் ஓதும் வேதம் | Gayathri Raghuram sv sekar #Media  #Reservation  கியாரே செட்டிங்கா? Aransei

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து ஆபாச காணொளி – பாஜக பிரமுகர் கைது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்