Aran Sei

சிதம்பரம்: நடராஜர் கோயிலில் பட்டில் சாதி பெண்ணுக்கு வன்கொடுமை இழைக்கப்பட்டதற்கு வழக்கு பதிந்தும் கைது செய்யாதது ஏன்? – சிபிஎம் கேள்வி

சிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில், பட்டியல் சாதி பெண்ணுக்கு வன்கொடுமை இழைக்கப்பட்டதை தொடர்ந்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிந்து 5 மாதங்களுக்கு பிறகும், காவல்துறை எவரையும் கைது செய்யவில்லை  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  தில்லை நடராஜர் கோயில் என்பது  மக்களின் சொத்து ஆகும். ஆனால் தீட்சிதர்கள் தங்கள் தனிப்பட்ட சொத்தாக பாவித்து அடாவடியாக நடந்து வருகிறார்கள்.

சென்னை: சாலையில் எச்சில் துப்பிய அரசுப் பேருந்து நடத்துனர் – சராமாரியாக அடித்த காவல்துறை

சில நாட்கள் முன் கோயிலிற்கு சென்ற அரசு அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவிடம், பத்திரிக்கையாளர்கள் கேட்டார்கள். அதற்கு பதில் சொல்லிய அமைச்சர், தானே கோயிலுக்கு நேரில் செல்ல இருப்பதாக தெரிவித்தார்.

உடனே, ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்பான இந்து முன்னணி, அமைச்சர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டுள்ளது.

உத்தரபிரதேசம்: மகனை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை சுட்டுக் கொன்ற காவல்துறை

நாட்டின் அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், பக்தர்களின் வழிபாட்டு உரிமையை மறுத்தும், அடாவடியாக செயல்படும் தீட்சிதர்களை யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்று மிரட்டும் தைரியம் எங்கிருந்து வருகிறது?

தமிழ் நாடு அரசு, இந்த மிரட்டலுக்கும், அடாவடிக்கும் எதிராக உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரை சுத்தி தெரிஞ்சுகிட்ட உண்மை I Tales of Kadodi

சிதம்பரம்: நடராஜர் கோயிலில் பட்டில் சாதி பெண்ணுக்கு வன்கொடுமை இழைக்கப்பட்டதற்கு வழக்கு பதிந்தும் கைது செய்யாதது ஏன்? – சிபிஎம் கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்