Aran Sei

சிதம்பரம்: குழந்தை திருமணம் செய்து வைத்த நடராஜர் கோயில் தீட்சிதர்கள் – காவல்துறை வழக்கு பதிவு

17 வயது சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்ததாக  சிதம்பரம் தீட்சிதர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் சமூகநலத்துறை அலுவலர் சித்ரா, சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதரான சிவராமன் என்பவரின் மகன் கபிலன் என்பவருக்கும், தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த ஜூன் 3-ம் தேதியன்று கீழவீதி எம்.எஸ் திருமண மண்டபத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றதாகவும், அதனையொட்டி கீழவீதி ராசி திருமண மண்டபத்தில் விருந்தோம்பல் நடைபெற்றதாகவும் கூறப்பட்டிருந்தது.

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு – சீமான் அறிவிப்பு

அதனடிப்படையில் விசாரணை நடத்திய சிதம்பரம் நகர காவல் துறையினர், குழந்தை திருமணம் நடைபெற்றது குறித்து நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சிவராமன், சோ.பானுசேகர், கபிலன், எம்.எஸ் திருமண மண்டபம் உரிமையாளர் ஆகியோர் மீது  வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிதம்பரத்தில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மத்தியில் குழந்தைத் திருமணம் நடத்துவது ஆரம்ப நாட்களில் இருந்தே பழக்கத்தில் இருந்து வருகிறது. இதுகுறித்த புகார்கள் எழும்பிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அது தடைபட்டிருந்தது, அல்லது அது போன்ற திருமணங்கள் வெளியே தெரியாமல் இருந்து வந்தது

குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்கட்சி தலைவர்களின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு – 13 கட்சிகள் இணைந்து ஒருமனதாக முடிவு

தற்போது நடராஜர் கோயில் நிர்வாகம் குறித்த விஷயத்தில் அவர்கள் தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் மீண்டும் குழந்தை திருமணம் குறித்த புகார்கள் தலையெடுக்க தொடங்கியுள்ளன.

அடிமைகளின் சண்டையை தொண்டர்கள் முறியடிப்பார்கள் | ADMK latest News | KC Palanisamy Interview

சிதம்பரம்: குழந்தை திருமணம் செய்து வைத்த நடராஜர் கோயில் தீட்சிதர்கள் – காவல்துறை வழக்கு பதிவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்