Aran Sei

சென்னை: டி.பி.ஜெயின் கல்லூரியியை நிர்வகிக்க தனி அலுவலரை நியமித்தது தமிழ்நாடு அரசு

மிழ்நாடு தனியார் கல்லூரி (ஒழுங்காற்றுச்) சட்டத்தின்படி டி.பி.ஜெயின் கல்லூரியியை நிர்வகிக்க தனி அலுவலரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  சென்னை-97 துரைப்பாக்கத்தில் செயல்பட்டுவரும் த.பெ.ஜெயின் கல்லூரியில் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை கல்லூரி ‘நிர்வாகம் மேற்கொள்ளாத் நிலையில் அங்கு நிலவும் அசாதாரண நிலையை கருத்தில் கொண்டும், 287202ஆம் நாளிட்ட கல்லூரிக்கல்வி இயக்குநரின் செயல்முறை மூலம் த.பெ. ஜெயின் கல்லூரியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கல்லூரிக் கல்வி இணை,, இயக்குநர் (நிதி) மற்றும் சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் நியமனம் செய்யப்பட்டனர்.

கல்வியும் தனியார்மயமும்  – பேரா. A.P. அருண்கண்ணன்

மேற்காணும் கல்லூரிக்கல்வி இனை இயக்குநர்களின் அறிக்கையின் அடிப்படையிலும் மாணாக்கர் நலன் கருதியும் அக்கல்லூரியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டும் த.பெ.ஜெயின் கல்லூரி நிர்வாகம் தொடர்பாக த.பெ.ஜெயின் கல்லூரியை நிர்வகிக்க தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்காற்றுச்) சட்டம், 1976 பிரிவு 4.A ன்படி தனிஅலுவலர் ஒருவரை நியமனம் செய்யுமாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டார்.

மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசுக் கடிதத்தில், தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்காற்றுச்) சட்டம், 1976; பிரிவு 14.Aன் கீழ், சென்னை, துரைப்பாக்கம், த.பெ.ஜெயின் கல்லூரிக்கு தனி அலுவலரை என் நியமிக்கக் கூடாது என்பதற்கான காரணம் கேட்பு அறிவிப்பு [Show Cause Notice) கல்லூரிச் செயலருக்கு அனுப்பப்பட்டு அது குறிந்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

தேசியக் கொடி ஏற்றுவதில் சாதியப் பாகுபாடு ஏற்படக்கூடாது – மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்

த.பெ. ஜெயின் கல்லூரியின் செயலரிடமிருந்து பெறப்பட்ட விளக்க கடிதத்தில், அக்கல்லூரி நிர்வாகத்தில் எந்தவிதமான முறைகேடோ, நிர்வாக சீர்கேடுகளோ மற்றும் அசாதாரண சூழ்நிலையோ எதுவும் ஏற்படவில்லை என்றும், தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்காற்றுச்) சட்டம் 1976ன் பிரிவு 14(A)ன் படி கல்லூரிக்கு தனி அலுவலர் நியமனம் செய்யத் தேவையில்லை என்றும், இக்கல்லூரியானது ஜெயின் சிறுபான்மை கல்லூரியின் கீழ் வருவதால், இக்கல்லூரிக்கு தனி – அலுவலர் நியமனம் பொருந்தாது என்றும், மேலும், அக்கல்லூரியில் பணியாற்றும் அரசு, உதவிபெறும் கல்லூரி ஆசிரியர். உடற்கல்வி ஆசிரியர்” திருதேசிங்கு ராஜன் அவர்களை, திரும்பப்பெற்று கல்லூரியை சுயநிதி கல்லூரியாக நடத்திட அனுமதி அளிக்குமாறும் அக்கல்லூரி செயலர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேற்கண்ட கல்லூரிச் செயலரின் விளக்கம் தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநரின் கடிதத்தில், காரணக் கேட்பு அறிவிப்பில் ‘குறிப்பிட்டுள்ள நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் ஆகியவற்றிற்கு கல்லூரி நிர்வாகம் அளித்துள்ள பதில்கள் திருப்திகரமான பதிலாக அமையவில்லை என்றும், | அனைத்து பதில்களும் உண்மைக்குப் புறம்பானதாக உள்ளது என்றும், எனவே, காரணக் கேட்பு” அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு அக்கல்லூரிக்கு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்காற்றுச்) சட்டம்: 1976ன்பட்ட தனி அலுவலர் நியமனம் செய்வது தொடர்பாக மேல்நடவடிக்கை தொடரலாம் என சென்னை மண்டல் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளதின் அடிப்படையில், காரணக் கேட்பு அறிவிப்பில் தெரிவித்துள்ளன்று, சென்னை37, த.பெ.ஜெயின் கல்லூரிக்கு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்காற்றுச்) சட்டம், 1976ன் படி தனி அலுவலரை நியமனம் செய்ய கல்லூரிக்கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்தரகாண்ட்: தேசியக் கொடி இல்லாத வீடுகளை புகைப்படம் எடுங்கள் – சர்ச்சை பேச்சுக்கு விளக்கமளித்த பாஜக தலைவர்

22. 01. 2022ஆம் நாளிட்ட கல்லூரிக் கல்வி இயக்குநரின் கடிதத்தில் த.பெ.ஜெயின் கல்லூரி ஒரு சிறுபான்மையினர் கல்லூரி என்பதால் தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்காற்றுச்) சட்டம் 1978, பிரிவு 14.A.இன்: கீழுள்ள இரண்டாவது காப்புரையின்படி அக்கல்லூரியின் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரையே தனி அலுவலராக ” நியமனம் செய்யப்பட வேண்டும் கல்லூரிக்கல்வி இயக்குநர் என பரிந்துரைத்துள்ளார்.

தபெ, ஜெயின் கல்லூரிச் செயலரின் விளக்கம் மற்றும் கல்லூரில் கல்வி இயக்குநரின் பரிந்துரை ஆகியவற்றை அரசு கவனமுடன் பரிசீலித்து, அதனை ஏற்று, சென்னைன, த.பெ.ஜெயின் கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக, அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கையை கல்லூரி நிர்வாகம் மேற்கொள்ளாத நிலையில் அங்கு நிலவும் அசாதாரண நிலையை கருத்தில் கொண்டும், கல்லூரியைச் சுற்றி வசிக்கும் ஏழை, எளிய மாணாக்கர்களின் நலனை கருத்தில் கொண்டும், மேற்கண்ட கல்லூரி ஒரு சிறுபான்மையினர் கல்லூரி என்பதால், தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்காற்றுச்) சட்டம் 975, பிரிவு 14.A.இன் படி அக்கல்லூரியின் மேலாண்மையை, தற்காலிகமாக இடைநீக்கம் செய்து, அக்கல்லூரி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்திட ஓராண்டு காலத்திற்கு அல்லது அக்கல்லூரி மேலாண்மையை மறுசீரமைக்கும் வரை. இவற்றில் எது பிந்தையதோ அலுவரை அக்கல்லூரியினை நிர்வகிக்க அச்சிறுபான்மை, இனத்தைச் சார்ந்த சென்னை, கே.சி.எஸ்.காசி நாடார் கல்லூரியின் பொருளியல் உதவிப் பேராசிரியர் முனைவர். சந்தோஷ் டி.சுரானா என்பவரை தனி அலுவலராக, தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்காற்றுச்) சட்டம், 1976, பிரிவு 14.Aண்படி ஓராண்டு காலத்திற்கு நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Kallakurichi Sakthi School teacher turns approver? | Krithika Teacher Petition | Balan interview

சென்னை: டி.பி.ஜெயின் கல்லூரியியை நிர்வகிக்க தனி அலுவலரை நியமித்தது தமிழ்நாடு அரசு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்