Aran Sei

சென்னை: விசாரணையின் போது வாலிபர் மரணம் – காவல் மரணமென குடும்பத்தினர் குற்றச்சாட்டு

சென்னையில் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்தவர்  காவல்துறை சித்தரவதையால் மரணமடைந்ததாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி செய்து வந்தார். ஏப்ரல் 18 ஆம் தேதி திங்கள்கிழமை இரவு திருவல்லிக்கேணியில் வசித்து வந்த கட்டிடத் தொழிலாளி சுரேஷ் (28) என்பவருடன் வந்துள்ளார்.

சென்னை புரசைவாக்கம், பிரிக்ளின் சாலை சந்திப்பில், 18ம் தேதி இரவு, தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய எஸ்.ஐ., புகழும் பெருமாள், தலைமை காவலர் தீபக், காவலர் பவுன்ராஜ் ஆகியோர், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களோடு வந்த இருவரை காவல்துறையினர் விசாரணைக்காக அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சேலத்தில் மாற்றுத்திறனாளி காவல் மரணம் – மக்கள் போராட்டத்தின் காரணமாக மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம்

காவல் நிலையத்திற்கு இரண்டு பேரை அழைத்து வந்த விசாரணை நடத்தியபோது திடீரென விக்னேஷ்க்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது காவல் மரணம் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த அவரின் குடும்பத்தினரிடம் பேசுகையில், விக்னேஷ் கைது செய்யப்பட்டது குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், ஊடகங்கள் மூலம் அதைப் பற்றி அறிந்ததாகவும் குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடலை பார்க்க காவல்துறையினர் அனுமதிக்காததால், பல மணி நேரம் காத்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.

“விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டது குறித்து எங்களுக்கு தெரியாது. ஒருவர் இறந்துவிட்ட்தாகச் செய்தியில் பார்த்தோம், அதன் பிறகு நாங்கள் இங்கு வந்தோம் ” என்று சுரேஷின் தாய் கற்பகம் கூறியுள்ளார்.

திகார் சிறையில் அங்கித் குஜ்ஜார் மரணம் ஒரு காவல் வன்முறை – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

நேற்று திருவல்லிக்கேணியில் கடை போட்டிருந்தேன். கைது செய்யப்பட்ட பின்னர் எனது மகன் இன்னொருவர் அருகில் நிற்பதை எனக்குத் தெரிந்த சில சிறுவர்கள் தொலைபேசியில் காட்டினார்கள். அதைப் பார்த்தவுடனே நான் அழுதுவிட்டேன். பிறகு வீட்டுக்கு வந்து எல்லோரிடமும் சொன்னேன் என்று இறந்தவரின் தாய் தெரிவித்துள்ளார்.

விக்னேஷின் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்குள் உட்கார வைக்கப்பட்டு, ஊடகங்களுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் விக்னேஷின் சகோதரர் வினோத், காவலர்களின் மேற்பார்வையின் கீழ் அமைதியாக அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது.

நாங்கள் விக்னேஷின் சகோதர்ரிடம் பேசியபோது. அவர் தன்னுடைய சகோதரரின் உடலைப் பார்த்ததாகவும், அவரது முகம் மற்றும் கைகளில் காயங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் உடலை பார்த்த மற்றொரு நபரிடம் பேசியபோது, விக்னேஷின் முகம் மற்றும் கைகளில் காயங்கள் இருப்பதை உறுதி செய்தார்.

தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை மரணம் – விசாரணையில் காவல்துறை

விக்னேஷுக்கு உடல்நலக் குறைவு ஏதும் இல்லை என்று கூறியதால், உடலை தங்களிடம் ஒப்படைக்க மாட்டோம் என்றும், நேரடியாக சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் காவல்துறையினர் கூறியதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணை நடந்து வருவதால், காவல்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Source: thenewsminute

தமிழ்நாடு ஆளுநருக்கு கறுப்பு கொடி காட்டியது தொடர்பாக விளக்குகிறார் பேராசிரியர் ஜெயராமன்

சென்னை: விசாரணையின் போது வாலிபர் மரணம் – காவல் மரணமென குடும்பத்தினர் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்