அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணிக்கு, சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தொழிலதிபர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ராவின் உறுப்பினர்களும், இந்து முன்னணி உறுப்பினர்களும் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் டபிள்யூ.எஸ். ஹபீப்பை அணுகியபோது, ரூ.1,00.008 மதிப்பிலான காசோலையை நன்கொடையாக அளித்துள்ளார்.
இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான நட்பை வளர்க்க விரும்புவதாகக் கூறும் ஹபீப், “நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள். இந்த நம்பிக்கையுடன்தான் இந்தத் தொகையை நான் நன்கொடையாக அளித்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சிலர், இஸ்லாமியர்களை இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் எதிரானவர்கள் என்று கட்டமைக்கப்படும் பொய்யைக் கண்டு, நான் வேதனையடைகிறேன். ஒரு நல்ல காரணத்திற்காக நன்கொடை வழங்குவதில் தவறில்லை. நான் வேறு எந்தக் கோவிலாக இருந்தாலும் நன்கொடை அளித்திருக்க மாட்டேன். ஆனால், இந்த ராமர் கோவில் அப்படியல்ல. பல ஆண்டுகளாக இருந்த சர்ச்சை இப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.” என்று ஹபீப் தெரிவித்துள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.